விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் மறைந்த பார்வதி அம்மாளுக்கு இரங்கற் பிரேரணையொன்றை நிறைவேற்ற யாழ். மாநகர சபை மறுப்புத் தெரிவித்துள்ளது.எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரால் அது தொடர்பான பிரேரணை முன் வைக்கப்பட்ட போதும், மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் அதற்கு இணக்கம் தெ ரிவிக்கவில்லை. மாநகர சபையின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விடயம் என அதனை அவர் ஒதுக்கி விட்டார்.
பார்வதி அம்மாளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தவும், அவரது அஸ்தி சிதைக்கப்பட்டமையைக் கண்டிக்கவும் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர் சங்கையா (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) அதன் காரணமாக பெரும் அதிருப்தி அடைந்தார்.
அதனையடுத்து மாநகர சபை நிர்வாகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதன் காரணமாக சபை பெரும் அமளி துமளியானது. கடைசியில் எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படாத நிலையில் சபை அமர்வு நிறைவு பெற்றுள்ளது.



0 Responses to வீரத்தாயின் இரங்கற் பிரேரணைக்கு மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் மறுப்பு