Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பூண்டி ஒன்றியம் சீதஞ்சேரியில் அக்கட்சி தொண்டர்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

பின்னர் ராஜபக்சே உருவ பொம்மையை ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக இதில் கலந்து கொண்டனர்.

இதேபோல கும்மிடிப்பூண்டி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் அருகே ஒன்றிய செயலாளர் ஜெமினி தலைமையில் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவபொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதில் நகரசெயலாளர், கண்ணியப்பன், பொருளாளர் தலீத்ஐயா, ஒன்றியதுணைச்செயலாளர் நேசக்குமார், சுப்பிரமணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 Responses to ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு: ஊத்துக்கோட்டை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com