ஒரு இனத்தின் விடுதலைக்குப் போராடிய தலைவரின் அன்னை என்ற ரீதியில் புலம்பெயர் நாடுகளில் அவருக்கும் பெரும் அஞ்சலி நிகழ்வுகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சொந்த ஊரில் அவருக்கான அஞ்சலி சரியாகச் செய்யப்படவில்லை என்பதே பெரும் குறையாக உள்ளது.
ஆனால் இவற்றை எல்லாம் கடந்து, ஒரு தாயார் தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்துள்ளார். இலங்கை இராணுவத்தின் சுற்றிவளைப்பு, புலனாய்வுப் பிரிவினரின் பிரசன்னம் என்பவற்றை எல்லாம் மீறி, அவர் தான் சொல்லவந்ததை சொல்லித் தீர்த்துள்ளார்.
வட கிழக்கில் பொதுமக்கள் சிலர் என்ன சொல்ல முற்படுகிறார்களோ, சில பொதுமக்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை இந்தத் தாய் சொல்லித் தீர்த்துள்ளார். நிச்சயம் பார்க்கவேண்டிய காணொளி. இனியாவது பயந்து அடங்கிக் கிடக்கும் பொதுமக்கள் மத்தியில் ஒரு எழுச்சி வரட்டும். அடிமைத் தனம் உடையட்டும்.
அதிர்வு



இந்தத் தாய்க்கு இருக்கும் வீரம் எமக்கில்லையே அவமானப் படுகின்றோம்.