டென்மார்க்கின் பிரபல வழக்கறிஞர் விக்டர் கோப் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். அதற்கு ஆதாரமாக அவர் ஏராளம் வாதங்களை முன் வைக்கவும் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் சம உரிமை கொண்டவர்கள் என்ற நிலையில், ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேசப் பிரகடனங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்கள் என்ற ரீதியில் அந்த இயக்கத்தின் மீது தடை விதிக்க முடியாது என்பது அவர் முன் வைக்கும் பிரதான வாதமாகும்.
அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய எடுத்துள்ள தீர்மானம் தவறானது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து, தடையை நீக்கிக் கொள்ள வைப்பது விக்டர் ஹோப்பின் எதிர்பார்ப்பாக உள்ளது.



காலம் கடந்த ஜானம் என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மேலுள்ள தடையை ஐரோப்பிய ஒன்றியத்தை நீக்கவைப்பதன் மூலமும் அதேநேரத்தில் ஏனைய விடுதலைப் புலிகளைத் தடை செய்த நாடுகளையும் தடையை நீக்க அறவழியில், உலகச் சட்டங்களை மதித்து, அறிவின் துணை கொண்டு ஈழத்தமிழர்கள் போராடவேண்டும். இனிமேல் நமது விடுதலைப் போராட்டத்தை வன்முறை இன்றி, சட்டப்படி, சாத்வீகமாக, புத்தி ஜீவிகளின், சட்ட வல்லுனர்களின் உதவியுடன் முன்னெடுத்து வெற்றி வாகை சூட வேண்டும்.