Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தூங்குகிறாள் அன்னை - கிரிகாசன்

பதிந்தவர்: தம்பியன் 22 February 2011

நல்லதோர் வீரம் செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் போட்டதென்றே
வல்லதோர் எம்தலைவன் தன்னை
வாழ்வுக்களித்தவர் போகவிட்டோம்
கொல்லுதே எம்விதியும் ஒரு
கொஞ்சமோ நெஞ்சமே நோகுதம்மா
வல்லமைதா தெய்வமே எம்
வாழ்வில் தொலைத்தது கோடியம்மா

சொல்லவோ ஆகுதில்லை ஒரு
சூரியன் தோன்றிய செந்தணலும் -இன்று
இல்லையோ எங்கள் மண்ணில் -நாம்
இங்கிட்டபாவங்கள் இன்னுமுண்டோ
எல்லையே இல்லை துன்பம் -எம்மை
எத்தனைநாள் இன்னும் தொட்டுவரும்
கல்லையோ நெஞ்சில் கொண்டு -அந்த
காக்கும் கடவுள் கண்மூடுதம்மா

எத்தனை துன்பப் பட்டாய் -அந்த
எத்தர்கள் வென்றதில் கொக்கரித்தே
சத்தியதேவன் அன்னை -உன்னை
சஞ்சல மிட்டிட செய்ததென்ன
உத்தமனாம் ஒருவன் -அயல்
உள்ளவன் போ என்று வஞ்சமிட்டான்
அத்தனையும் ஒருவன் அந்த
அனபுமகன் நின்றால் ஆகிடுமோ

நல்லவராய் நடித்தோர் நெஞ்சில்
நஞ்சுகள் இன்று வளர்ந்ததம்மா -இனிப்
பொல்லா உலகத்திலே -இந்தப்
பூமியில் நல்லவர்க் கேதுஇடம் -நீயும்
செல்லும் இடமறியோம் -ஆயின்
நல்ல அமைதிகொள், நாட்டினிலே கொடுந்
தொல்லை கனத்ததம்மா உன்
தூயமனம் வேண்டும் தூக்கமம்மா

0 Responses to தூங்குகிறாள் அன்னை - கிரிகாசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com