அப்போது மீனவர்கள் சமீபகாலகளாக தொடர்ந்து தாக்கப்பட்டுவருகிறார்கள். தேர்தல் காலம் நெருங்கிவிட்டதால் அவர்களுக்கான நிவாரணம் 5 லட்சமாக உயர்ந்துவிட்டது.
செல்லப்பன் என்ற மீனவர் கொல்லப்பட்டபோது 3 லட்சமாக இருந்த நிவாரணம் பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் கொல்லப்பட்டபோது தேர்தலை கருதி 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இனிமேலும் மீனவர்கள் கொல்லப்பட்டால் அவர்களுக்கான நிவாரணம் இன்னும் உயர்த்தப்படலாம். இப்போது நிருபமாராவ் இலங்கை சென்று வந்திருக்கிறார். கொலைக்காரன் ராஜபக்சேவை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.
அடுத்து பிரதமர் மன்மோகன்சிங்க் கூட சென்று வர வாய்புள்ளது. இது எல்லாமே தேர்தலுக்கான கண்துடைப்ப்புதான்’’ என்று கூறினார்.
அவரிடம் "தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று செய்திகள் வருகிறதே உளவுத்துறை எச்சரித்ததா?" என்று கேட்டதற்கு,
"என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அரசு உளவுப்பிரிவு இது பற்றி எனக்கு சொல்லவில்லை. ஆனால் தனிப்பட்ட உளவுப்பிரிவுகள் எச்சரித்துள்ளது.
அதனால் எங்கு சென்றாலும் எச்சரிக்கையுடனேயே செல்கிறேன்" என்று கூறினார்.



0 Responses to என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது: சீமான்