அறிவூட்டும் நோக்கோடு தமிழ் இளையோர் அமைப்பினால் தமிழ் உரிமை வாரம் பெப்பிரவரி 1 முதல் பெப்பிரவரி 8 வரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் உரிமை வாரத்தை முன்னிட்டு பல பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ் மாணவர் அமைப்புகள் அங்கே கல்வி கற்றும் தமிழ் மற்றும் வேற்றினத்து மாணவருக்கு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் அநியாயங்கள் பற்றிய அறிவை ஊட்டும் முகமாக பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றன. அந்நிகழ்வுகளின் ஒன்றாக Waterloo தமிழ் மாணவர் அமைப்பினால் ஒரு Coffeehouse நிகழ்வு திங்கள் பெப்பிரவரி 7 ஆகிய இன்று Waterloo பல்கலைக்கழகத்தின் Student Life Centre: Great Hall இல் இடம்பெற்றது. இந்நகிழ்வு Waterloo Public Interest Research Group (WPIRG) அமைப்பின் ஆதரவில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற்பகல் 5 மணிக்கு Waterloo தமிழ் மாணவர் அமைப்பின் தலைவரின் உரையுடன் நிகழ்வுகள் தொடங்கின. இதனைத் தொடர்ந்து, Waterloo பல்கலைக்கழக மாணவரின் உருவாக்கத்தில் நடனங்கள் இடம்பெற்றன. மனித உரிமை மீரல்களை வர்ணிக்கும் ஓர் ஓவியக் கண்காட்சியும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.
Coffeehouse நிகழ்வில் WPIRG சார்பாக எரின் ஒல்டின்சுகி, Wilred Laurier பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் அமர்நாத் அமரசிங்கம், மற்றும் கனடியத் தமிழ் கொங்கிரசு சார்பாக தீபன் விக்ணேசுவரன் ஆகியோர் தமிழ் உரிமை வாரத்தின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.
Waterloo தமிழ் மாணவர் அமைப்பின் முயற்சியில் தமிழ் உரிமை வார்த்தைப் பற்றிய தங்கள் பார்வையையும் சமஉரிமையின் முக்கியத்துவத்தை பற்றியும் Waterloo பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் வேற்றினத்து மாணவர் வழங்கிய கருத்துகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு வழங்கப்பட்டன.
TYO Media – Canada



0 Responses to Waterloo பல்கலைக்கழகத்தில் தமிழ் உரிமை வார நிகழ்வு (படங்கள் இணைப்பு)