தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் செயலாளர் றொபேட் பிளேக் ஸ்கைநியுஸ் எனும் ஊடகத்திற்கே மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்குழு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பின்னனியில் இவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
உள்ளக விசாரணைக்குழுவை சர்வதேச நியமங்களுடன் வைத்திருப்பது சிறிலங்காவுக்கு விருப்பத்துக்குரியதாகவிருக்கலாம். ஆனால் அவ்விசாரணைக்குழுவானது சர்வதேச நியமங்களை எட்டாவிட்டால், சர்வதேச விசாரணைக்குழுவை நியமித்து அதனை செய்யவேண்டிய அழுத்தங்கள் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இறுதிக்கட்டப்போரின்போது பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கியநாடுகள் சபை மதிப்பீடு செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், கடந்த வாரம் ஐக்கியநாடுகள் சபையானது லிபியாவை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றுள்ளது என்றும் தெரிவித்தார்.
எனினும் அதனைப்போன்ற நிலைமையை தான் சிறிலங்காவுக்கு ஒப்பீடு செய்யவில்லை என்றும் ஆனால் சர்வதேச சமுதாயம் எ்வவாறு விழிப்புடன் இருக்கின்றது என்பதற்கு லிபிய விவகாரம் ஒரு எடுத்துக்காட்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



0 Responses to போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறிலங்கா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுக்கலாம்!: றொபேட்