Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸில் இலங்கை அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய பல்கலைக்கழக கருத்தரங்கு நாடு கடந்த தமிழீழ அரசால் முறியடிப்பு.

பிரான்சின் நொர்மொன்டி பிராந்தியத்தின் ஆர்ஜொர்தான் நகரசபையினால் பிரதம அதிதியாக சிறிலங்கா அரசாங்கம் அழைக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கு வலுச்சேர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருதரங்கொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளால் முடக்கப்பட்டது.

பேராசிரியர் Pierre SILLIERE அவர்களினால் "1983 முதல் 2009 வரை - ஒரு தலைமுறையின் ஒப்படைப்பு" எனும் தலைப்பில் இந்த கருத்தரங்கம் (Université de Caen) கோன் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளான மகிந்தன் சிவசுப்பிரமணியம் - சுபா குருபரன் ஆகியோருடன் உள்துறை அமைச்சக பிரான்சுக்கான செயலர் றமேஸ் பத்மநாதன் ஆகியோருடன் இரண்டு பிரென்சு பிரதிநிதிகளும் கருத்தரங்கில் பார்வையாளர்களாக பங்கெடுத்தனர்.

போருக்கு பிந்திய சிறிலங்காவை கட்டியெழுப்ப வாருங்கள் என அழைப்பு விடுத்து, சிறிலங்காவின் அபிவிரித்தியில் அனைவரையும் பங்கெடுக்க அழைத்ததோடு, உல்லாச பயணிகளின் சொர்கபுரியாக சிறிலங்காவை பேராசிரியர் Pierre SILLIERE கருத்தரங்கில் விபரித்தார்.

தமிழர்களின் நியாயமான போராட்டத்தை புறந்தள்ளியதோடு, புலம்பெயர் தமிழர்கள் உழைக்கவந்தவர்கள் எனும் கருத்தினை முன்வைத்த பேராசிரியர் Pierre SILLIERE அவர்கள் கேள்விகேட்கும் சந்தர்பத்தை பார்வையாளர்களுக்கு வழங்கினார்.

உண்மைக்கு புறம்பான பேராசிரியரின் கருத்துக்களுக்கு பதிலுரைகளை ஆதரபூர்வமாக முன்வைத்த தமிழர் பிரதிநிதிகள், சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பினை கருத்தரங்கில் பங்கெடுத்தவர்களுக்கு அம்பலப்படுத்தினர்.

தமிழர் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கும், கேள்விகளுக்கும் பதிலுரைக்க முடியாது பேராசிரியர், கருத்தரங்க மண்டபத்தை விட்டு இடையில் வெளியேறினார். கருத்தரங்கில் பங்கெடுதத்திருந்த பார்வையாளர்களுக்கு தமிழர் நியாயமான விடுதலைப் போராட்டத்தினை தமிழர் பிரதிநிதிகள் தொடர்ந்து எடுத்துரைத்தனர்.

இது குறித்து நாதம் ஊடக சேவைக்கு கருத்துரைத்த, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி மகிந்தன் அவர்கள் " நொர்மொன்டி பிராந்தியத்தின் பிரசித்தி பெற்ற FOIRE QUASIMODOநிகழ்வில் சிறிலங்கா அரசினை பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் முன்நிகழ்வாக இக்கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டதென்று தெரிவித்தார்.

நேரடியாக கருத்தரங்கில் பங்கெடுத்து, சிங்கள பேரினவாத அரசுக்கான ஆதரவுக்கரத்தை முடக்கியது போல், சிறிலங்கா அரச பிரிதிநிதிகள் பங்கெடுக்கின்ற FOIRE QUASIMODOநிகழ்வில், சிறிலங்கா அரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்த, அனைவரும் அணிதிரள வேண்டுமென உள்துறை அமைச்சு செயலர் றமேஸ் பத்மநாதன் தெரிவித்தார்.

நொர்மொன்டி பிராந்தியத்தில் இருக்கின்ற இருபதுக்கும் மேற்பட்ட பிரென்சு அமைப்பு பிரதிநிதிகளின் கூட்டிணைவில் உருவாக்கம் பெற்றுள்ள எனும் அமைப்பே சிறிலங்கா அரசாங்கம் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து ஏப்ரல் 29 முதல் 2 வரை தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

0 Responses to பிரான்ஸில் நாடு கடந்த தமிழீழ அரசால் இலங்கை அரசுக்கு விழுந்த அடி (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com