Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனரல் காரியதரசி திரு பன் கி மூன் அவர்கள் நியமித்த புலன்விசாரணை குழு தமது விசாரணைக்கான அறிக்கையை ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி வெளியிடுவதாக கூறியிருக்கும் நிலையில், இன்று அதை சார்த்து பல செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.

பிரான்சு நாட்டிலிருந்து பல நூற்றுகனக்கானோர், எழுத்து மூலமாகவும், வீடியோ சாட்சியங்கள் ஊடாகவும், உறவுகளை இழந்தவர்களும், உறவுகளை காணாமல் இன்றுவரை தேடிக்கொண்டிருபவர்களும்,பாலியல் வல்லுறவுக்கு உள்ளானவர்களும், சித்திரவதை செய்யப்பட்டவர்களும், குற்றங்களை நேரில் கண்டவரும் என்று பலர் சாட்சியகள் அளித்திருந்தனர்.

இவர்கள் எல்லோரும் தமக்கு நீதி கிடைக்காதா என்று தினமும் எதிர் பார்த்து கொண்டிருகிறார்கள்.

ஆகவே ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை குழு தாம் எடுத்த சாட்சியங்களை, அதன் அறிக்கையை முற்றும் முழுதாக தமிழ் மொழியில் விட வேண்டும் என்று நாம் கேட்டு கொள்கிறோம்.

இன்று ஐக்கிய நாடுகள் சபை மேலும், பக்க சார்பாக தமது பொருளாதார நலனை மட்டும் வைத்து செயல் படும் பாதுகாப்பு கவுன்சில் மேல் நம்பிக்கையற்று இருக்கும் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை இருக்க வேண்டும் என்பது என்று எதிர்பார்க்கிறோம்.

சீன, ரஷ்ய போன்ற நாடுகளின் அழுத்தத்திற்கு பாதுகாப்பு சபையின் ஏனைய நாடுகள் அடிபணிய கூடாது என்பதையும், இந்திய போன்ற நாடுகள் கொடுக்க போகின்ற அழுத்தங்களுக்கு செவிசாய்க்காமல் 2ஆம் உலக யுத்தத்தில் ஒரு பாரிய அழிவுக்கு பின் இனி இது வேண்டாம், உலகத்தில் உள்ளை அதனை மக்களும் தமது உரிமைகளை பாதுகாத்து சுதந்திரமாக வாழ வேண்டும் என்று உருவாகிய ஐக்கிய நாடுகள் சபை, நாடுகளை பாதுகாப்பதை விட்டு விட்டு மக்களை பாதுகா

க்க வேண்டியது அவர்கள் கடமை என்பதை மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறோம்.
இன்று போரின் கடைசி காலத்தில் நடைபெற்றதை விசாரித்து தமது அறிக்கையை விட தயாராக இருக்கும் ஐக்கிய நாடுகள் சபை, சிறி லங்கா அரசிடம் பரிந்துரைகளை வைக்காமல், சிறி லங்கா அரசு ஒரு விசாரணை கமிஷன் வைக்கும் ஒரு பரிந்துரையை செய்யாமல் சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் இந்த விசாரணையை தொடர வேண்டும் என்பது எமது வேண்டுகோள். சிறி லங்காவில் 1948யிலிருது விசாரணை கமிஷன் வைப்பதும் அதன் மூலமாக இன்று வரை எந்த வித தீர்வும் கிடைக்கவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த விசாரணை முள்ளிவாய்கால் கால கட்டத்தை மட்டும் பார்க்காமல் 1948யில் இருந்து, தமிழர்களின் நிலங்கள் பறிப்பு, மலையாக தமிழர்களின் பிறப்புரிமை மறுப்பு, இனக்கலவரங்கள் அன்று தொட்டு நடைபெற்ற கொலைகள்,காணமல் போனவர்கள், சொத்து அழிப்புகளும், சொத்து பறிப்புகளும் இந்த விசாரணைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதையும் கேட்டுகொள்கிறோம்.

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

0 Responses to ஐ.நா நிபுணர் குழு அறிக்கை தமிழில் வெளியீட வேண்டும்: மக்கள் பேரவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com