Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டம் பாளையங்கோட்டையில் நடந்தது. இதில் கலந்து கொள்ள நாம் தமிழர் கட்சி யின் தலைவர் இயக்குனர் சீமான் நெல்லை சென்றார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம், ’’நாம் தமிழர் கட்சி 18.05.2010 அன்று தொடங்கப்பட்டது. தற்போது கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு, தஞ்சை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கட்சி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இலங்கை அதிபர் ராஜ பக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். அதே நேரம் இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்வு மலர தனிஈழம் அமைய வேண்டும். அதற்கு உலக நாடுகள் ஆதரவு தர வேண்டும்.

சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் தரமானதாக இல்லை என்று கூறி தற்போது நிறுத்தி வைப்பதாக ஆளுங்கட்சி கூறியுள்ளது.

சமச்சீர் கல்வி திட்டம் கட்டாயமாக கொண்டு வரப்பட வேண்டும். மேலும் தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

0 Responses to சமச்சீர் கல்வியை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்: சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com