ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவை சந்திக்கும் வாய்ப்பு அவரது சிறிய மகள் அபர்ணா பொன்சேகாவுக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அபர்ணாவின் அறிக்கை ஒன்று லங்காதீப செய்தித்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தாம் தமது தந்தையை பார்வையிடவே இலங்கை வந்ததாகவும் ஆனால் அதனை மேற்கொள்ள முடியாமலே நாடு திரும்புவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
தாம் பல மாதங்களின் பின்னர் தமது தந்தையை பார்வையிட இலங்கை வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையில் தமது கடவுச் சீட்டு பரிசீலிக்கப்பட்டு இரகசிய காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.
சரத் பொன்சேகா குடும்பத்தின் பெயர்கள் கறுப்பு பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை தாம் அப்போது அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஒரு மணித்தியாலங்கள் வரையில் தாம் விமான நிலையில் இருந்தாலும், தம்மை யாரும் விசாரணை செய்யவில்லை எனவும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் சிறைச்சாலைக்கு சென்று தந்தையை பார்க்க முயற்சித்த போதும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.



0 Responses to அப்பாவை சந்திக்க மகளுக்கு மறுப்பு