Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்களை வெளிக்கொணர்ந்த ஆதார வீடியோ உண்மையானது தான் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் நிபுணர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கடந்த 2009-ல் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரின் போது, நிராயுதபாணியாக நின்ற ஆண்கள், பெண்களை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொன்ற படுகொலை நிகழ்வுகள் அடங்கிய விடியோக்களை அவ்வப்போது பிரிட்டனின் 'சனல் 4' வெளியிட்டு வருகின்றது.

இந்த வீடியோ ஆதாரத்தை போலியானது என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டது.

இதன் தொடர்ச்சியாக, அந்த வீடியோவை ஐ.நா.வின் தன்னிச்சையான புலனாய்வாளரும், தென்னா பிரிக்க சட்ட பேராசிரியருமான கிறிஸ்டோஃப் ஹெயின்ஸ் ஆய்வு செய்தார்.

தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றம் புரிந்தது உண்மையே என்பது நிரூபணமானது.

இதுதொடர்பான ஆய்வறிக்கையை மனித உரிமைகள் கவுன்சிலிடம் ஹெயின்ஸ்ட் இன்று கையளித்தார்.

இதையடுத்து, ஜெனீவாவில் அடுத்த மூன்று வாரங்களுக்கு நடைபெறவுள்ள மனித உரிமைகள் உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த ஆய்வறிக்கை தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to இலங்கை இராணுவத்தின் போர்க்குற்ற ஆதாரம் உண்மையானது: ஐ.நா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com