இலங்கையில் போர் முடிந்து இரண்டு வருடங்களாகின்றன. எனினும் அதன் நன்மையை இலங்கையின் தென்பகுதியில் உள்ளவர்களே அனுபவிக்கின்றனர். வடபகுதியில் உள்ளவர்கள் இன்னும் பயத்துடன் வாழ்வாதாரம் அற்ற நிலையிலுமே வாழ்ந்து வருகின்றனர் என்ற இந்தக் கருத்தை ஆசியாநெற் அமைப்பு வெளியிட்டுள்ளது.
தெற்கில் உள்ளவர்கள் போர் முடிவடைந்தமையை அடுத்து ஒரு ஜனநாயக தோற்றத்தை அனுபவிப்பதாக உணர்கிறார்கள். ஆனால், போரினால் சொந்த இருப்பிடங்களி;ல் இருந்து வெளியேற்றப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள், இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி, உரிய தொழிலின்றி அவலத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
அத்துடன், பயம் என்பது இன்றும் அவர்கள் மத்தியில் சூழ்ந்துகொண்டிருக்கிறது.
இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்துள்ள மக்களில் சுமார் 48 பேர் வரை தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
கல்வி நிலையில் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைப் படையினரின் ஆக்கிரமிப்பினால், தமிழர்கள் இன்னும் தமது சொந்த இடங்களில் குடியேற முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
அத்துடன், இன்னும் தமிழ் மக்கள் காணாமல் போகும் சம்பங்கள் இடம்பெறுகின்றன.
ஏ 9 வீதியில் ஓமந்தை, பளை, ஆகிய இடங்களுக்கு இடையில் இலங்கைப் படையினரால் சுமார் 60 க்கும் மேற்பட்ட ஆடம்பர விருந்தகங்கள் அமைக்கப்பட்டு அங்கு படையினர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போரின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் இடங்களில் பொருளாதார வளர்ச்சியை காணமுடியவில்லை. புதிலாக இவ்வாறான கட்டிட அமைப்புகளையே காணமுடிகிறது.
மன்னார் பிரதேசத்தில் போரினால் கணவர்மாரை இழந்த பெண்கள், கடுமையான தொழில்களில் ஈடுபட்டு குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய அவலநிலைக்கு உள்ளாகியுள்ளனர்.



0 Responses to போர் முடிவு! தமிழர்களுக்கு எவ்வித நன்மையுமில்லை: ஆசியா நெற்