Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை ஓர் "இனப்படுகொ​லை நாடு" என்று அறிவிக்க வேண்டும், தனி தமிழீழத்தி​ற்கான பொது வாக்கெடுப்​பை ஐ.நா சபை நடத்த வேண்டும்: கொ​ளத்தூர் மணி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் இல் பாவேந்தர் பாரதிதாசன் பேரவை சார்பில் நடந்த, சமூக நீதி போராளி பூ.அர.குப்புசாமி அவர்களின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பெரியார் திராவிட கழக தலைவர், "கொளத்தூர் மணி "அவர்கள், "இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டிப்பதும், அதற்கு காரணமான ராஜபக்சவை தண்டிப்பதும் மட்டுமே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வாக அமைந்து விடாது, இலங்கையை இனப்படுகொலை நாடு என்று அறிவிக்க வேண்டும். தனி தமிழீழத்தை நிறுவுவதற்கான பொது வாக்கெடுப்பை ஐ.நா மன்றம் உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், ஐ.நா நியமித்த, நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளில் "இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வந்ததை மறுபரிசீலனை செய்யவேண்டும்", "இறுதிக்கட்ட போரின்போது ஐ.நா மன்றத்தின் தலைமையகத்தில் நடந்த குளறுபடிகளை(விஜய் நம்பியாரும், அவரது தம்பி சதீஷ் நம்பியாரும் நிகழ்த்திய) விசாரிக்க வேண்டும்" என்ற நிபுணர் குழுவின் பரிந்துரைகளை சர்வதேச நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் பல்வேறு அம்சங்களை விவரித்து பேசிய அவர், இலங்கையில் நடந்தது "இனப்படுகொலை தான்" என்று அறிக்கை சுட்டிக்காட்டாதது வருத்தமளிப்பதாக கூறினார்.எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடக்க இருக்கும், ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கை புரிந்துள்ள போர்க்குற்றங்கள் பற்றி விவாதித்து, சர்வதேச விசாரணை கமிஷன் அமைக்க வழி செய்ய வேண்டும் என்றார்.

நிகழ்விற்கு பாரதிதாசன் பேரவை செயலாளர், கவிஞர் முத்து. சரவணன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் இளங்கோ வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் அமைப்பை சேர்ந்தவர்களும், தமிழ் உணர்வாளர்களும் திரளாக பங்கேற்றனர். இறுதியில் இளம் கார்க்கி நன்றி கூறினார்.


0 Responses to இலங்கை ஓர் "இனப்படுகொ​லை நாடு" - கொ​ளத்தூர் மணி (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com