யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழரொருவர் ஜொ்மனியில் பொருளியல் செனட்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இயன் கிருகரன் (72) என்பவர் ஜேர்மனியின் ஹம்பேர்க் பகுதியின் பொருளியல் செனற்றராக நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறையில் 1939 ஆம் ஆண்டு பிறந்த அவர் 1970 களில் ஜேர்மனிக்கு சென்றிருந்தார். அதற்கு முன்னதாக தனது கல்வியை பிரிட்டனில் நிறைவு செய்திருந்தார். ஜொ்மனியில் ஆரம்பத்தில் கொள்கலன்களை வாடகைக்கு விடும் உலகின் மிகப்பெரும் நிறுவனத்தில் பணியாற்றிய கிருகரன் பின்னர் தனது சொந்த நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார்.
அவரின் நிறுவனம் தற்போது ஜொ்மனியில் இயங்கும் பாரிய நிறுவனங்களில் ஒன்றாக மாறி சாதனை படைத்துள்ளது.
ஜொ்மனியில் அமைச்சர் நிலைக்கு உயர்ந்து ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சோ்த்துள்ள கிருகரன் வசிக்கும் ஜேர்மன் நாட்டில் அரை இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.



0 Responses to ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சோ்த்துள்ள கிருகரன்