Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவிடம் காட்டிக் கொடுத்துள்ளதாக தேசிய பிக்குகள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை அமைச்சர் பீரிஸ் இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளதாகவும் இதனால் நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்பட்டுளளாகவும் தேசிய பிக்குகள் முன்னணியின் ஆலோசகர் அத்தன்கனே ரத்னபால தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு பதிலாக சிலர் போர் வெற்றியை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

குறிப்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் சமீபத்தில் கையெழுத்திட்ட உடன்படிக்கை நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் நோக்கங்களை வேறு வழிகளில் பூர்த்தி செய்வதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.

இந்தியாவூடன் இணைந்து செயற்படுவதில் தவறில்லை என்ற போதிலும் அடிமையாகிச் செயல்பட முடியாது.

13ம் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்தல், அவசரகாலச் சட்டத்தை நீக்குதல், மனித உரிமை மீறல் விசாரணை என பல்வேறு வழிகளில் இந்தியா, இலங்கை மீது நெருக்கடிகளை திணித்து வருவதாக அத்தன்கனே ரத்னபால தேரர் தெரிவித்தார்.

0 Responses to இலங்கையை காட்டிக் கொடுத்த பீரிஸ் - தேசிய பிக்குகள் முன்னணி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com