Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான மனித உரிமைகள் மாநாட்டின் போது இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம் என நவநீதம்பிள்ளை வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் அவரது பதவியின் கீழ் உத்தியோகபூர்வமாக அமைவதில்லை என மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ஷேனுகா செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஆதாரமற்ற தகவல்களின் அடிப்படையில் அவர் சர்வதேச விசாரணைகளுக்கு அழைப்பு விடுப்பது மேலும் 20 வருடங்களுக்கு இந்த பிரச்சினைகளை தொடர செய்யும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to நவநீதம்பிள்ளைக்கு எதிராக மீண்டும் போர்கொடி தூக்கும் இலங்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com