வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு உடனடி தீர்வு ஒன்றை முன்வைக்க இலங்கை அராங்கம் தொடர்ந்தும் அழுத்தங்களை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகார பகிர்வு மற்றும் வட மாகாண உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்துதல் போன்ற அழுத்தங்கள் அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்படுகின்றன.
இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படாத பட்சத்தில், ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக இலங்கைக்கான ஆதரவை இடைநிறுத்திக் கொள்ளப் போவதாக, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க எச்சரித்துள்ளதாக லக்பிம நிவ்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகள் பூர்த்தியாக வேண்டும் என மன்மோகன் சிங் வலியறுத்தியூள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அனைத்து மாகாணங்களுக்கும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தவிர ஏனைய அதிகாரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இலங்கை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு பல்வேறு அழுத்தங்களை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இலங்கை தொடர்பில் இந்தியா விரைவான செயற்பாடுகளை காண்பிக்க வேண்டிய நிலையில் இருப்பதால் இலங்கை அரசாங்கத்துக்கு பாதகமான சூழ்நிலை ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக லக்பிம நிவ்ஸ் தெரிவித்துள்ளது.



0 Responses to இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கைக்கு மன்மோகன் சிங் எச்சரிக்கை