Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையை அமெரிக்கா, பிரித்தானியா போன்று அவுஸ்திரேலியாவும் வரவேற்க வேண்டுமென அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி டெனிஸ் ஜென்சன் வலியுறுத்தியுள்ளார்.

ரக்னி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தனது தொகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்றத்திடம் பிரஸ்தாப கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறியிருந்தார்.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த போர் பற்றி ஐ.நா செயலர் பான் கி மூனால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது பற்றி எனது தொகுதிலுள்ள தமிழ் மக்கள் என் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

போரில் ஈடுபட்ட இரு தரப்பும் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக சட்ட வீதிகளை மீறியிருப்பதாக இந்த அறிக்கை கூறுகின்றது. இவை போர்க்குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்கு இட்டுச் செல்லத்தக்கவை.

ஸ்ரீ லங்கா அரசாங்கம் பொதுமக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகளில் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதில்லை எனக் கூறிய பின்னரும் மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் நோக்கில் பாதுகாப்பு வலயத்திலிருந்த மூன்று பகுதிகளில் கடுமையான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இது தனிமனித பாதுகாப்பு பற்றி அனைத்துலக விதிகளை மீறும் செயற்பாடாகும்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் நியமித்துள்ள கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு நடுநிலையற்றது எனவும் இந்த ஆணைக்குழு நீதியானதும் உண்மையைக் கண்டறியும் வகையிலும் தனது விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும் இந்த நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் 2009ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் நடந்தவை பற்றி இந்த ஆணைக்குழு ஆராயவில்லை.

அனைத்துலக சமூகம் பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியிருப்பதும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இதனை ஏற்றுக்கொண்டுள்ள ஐ.நா செயலர் பான் கி மூன், ஐ.நா சபையும் பொதுமக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றார். இது பற்றி ஐ.நா ஆராயவுள்ளது.

அவுஸ்திரேலியா உட்பட அனைத்துலக சமூகம் லிபியா, பர்மா, பிஜி. மற்றும் சிம்பாப்வே போன்ற நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் விடயங்களில் கவனம் செலுத்தியது போன்று இலங்கை விடயத்தில் செயற்படவில்லை. இந்த நேரத்தில் அவுஸ்திரேலியா போர்க்குற்றம் பற்றியும் மனித உரிமை மீறல் தொடர்பாகவும் ஆழமாகவும், ஆக்கபூர்வமாகவும் அனைத்துலக மனிதகுல சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் உட்பட அனைத்துலக நாடுகள் பல ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை விரவேற்றுள்ளன. அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்டதற்கும் இந்த நாடுகள் நன்றி கூறியுள்ளன. இதேபோன்று பகிரங்க அறிவிப்பு ஒன்றை அவுஸ்திரேலியாவும் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் அது இங்குள்ள நீதி கேட்கும் தமிழ் மக்களை ஒன்றிணைத்துஇ அமைதிக்கான பாதையை நோக்கி நடக்க வழிகோலும். இது இலங்கையிலுள்ள மக்களிற்கும் அமைதியைக் கொடுக்கும் என்றும் பிரஸ்தாப கோரிக்கையை முன்வைத்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது கலாநிதி டெனிஸ் ஜென்சன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை அவுஸ்திரேலியாவும் வரவேற்க வேண்டும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com