Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இலங்கை கவனம் செலுத்த வேண்டுமென .நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

அதிலும் குறிப்பாக நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு விடயங்கள் தொடர்பில் .நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனம் திரும்பியுள்ளதாக அவரது பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நியூயோர்க்கில் .நா. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் மகாநாட்டின் போதே மார்ட்டின் நெசர்கி மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்து இலங்கையின் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டுமென .நா. செயலாளர் நாயகம் விரும்புகின்றார். அதிலும் குறிப்பாக பொறுப்புக் கூறல் தொடர்பான செயற்பாடுகள் குறித்து அவர் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார் என்றும் மார்ட்டின் நெசர்கி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் கடமையாற்றும் .நா. ஊழியர்களின் பாதுகாப்புக் குறித்த விடயம் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும்: மூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com