தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வுகள் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது.
நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலன் சிவபாலன், நடராசா இராஜேந்திரா, நாடு கடந்த தமிழீழ அரசின் மதியுரைக்குழு உறுப்பினர் பீற்றர் சால்ள்ஸ் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
இதனைத்தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதற்கு முன்னதாக நாடு கடந்த தமிழீழ அரசினால் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களுக்கு முகவரியிடப்பட்ட மகஜர் ஒன்று மனித உரிமை ஆணையாளர் நாயகத்தின் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டது.
நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன், சுவிஸ் பிரதிநிதி செல்வி சிறிசாஜிதா சிவராசா, துணை நிதி அமைச்சர் நடராசா இராஜேந்திரா, தம்பிப்பிள்ளை நமசிவாயம் ஆகியோர் இந்த மகஜரை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் கையளித்தனர்.
இதனைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் தியாகி முருகதாஸ் அரங்கில் இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகின.
சுவிட்சர்லாந்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி உட்பட பலநாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
ஜெனிவா,ஐ.நா. சபை முன்றலில் நடைபெற்ற தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வுகள்
பதிந்தவர்:
தம்பியன்
19 May 2011



0 Responses to ஜெனிவா,ஐ.நா. சபை முன்றலில் நடைபெற்ற தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வுகள்