Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப் பிடித்து தள்ளியவர்கள் யார்?

உலகத் தமிழினத்தின் அன்புக்கும், மதிப்புக்கும் உரியவரும், எழுபத்தி எட்டு வயதிலும் அவரது இரு மொழித்திறமையால் தனது ஆழ்ந்த கருத்துக்களை எம்மினத்துக்காக சர்வதேசத்தின் முன் எடுத்துச்செல்ல என்றுமே தயங்காத ஈழவேந்தன் ஐயாவை, தமிழீழத் தேசியத் துக்கநாளான மே 18 ம் நாள், கனடா மக்கள் அவையினரால் ரொறான்ரோ மாநகரில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், மக்களவையைச் (NCCT) சார்ந்தவர்கள் அவரது கழுத்தில்ப் பிடித்துத் தள்ளியதாக ஈழவேந்தன் ஜயா வேதனையுடன் கூறினார்.

மேடை அருகே நின்ற புதிய மக்களாட்சித் (NDP) தலைவர் ஜாக் லேயிற்றனையும் ராதிகாவையும் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க சென்றவேளை ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது தமிழினத்தை அவமதித்தது மட்டுமல்ல மானிடத்தையே மதிக்காத ஓர் செயலாகும்.

அதைப் பார்த்தவர்கள் அனுதாபத்துடனான அக்கறையுடன் அவருக்கு வருத்தத்தோடான ஆறுதலை வழங்கியபோது மக்களவையைச் சார்ந்த முக்கியமானவர்கள் பார்த்தும் பாராமுகம் காட்டியது தனக்கு வேதனை தருவதாகவும் கனடாத் தமிழரின் மூத்த அரசியல்வாதியான ஈழவேந்தன் ஐயா கும்பிட்டார்.

நேரில் கண்ட பலர் தொலைபேசிமூலம் தன்னை அழைத்து ஆறுதல் கூறியதாகவும், சாட்சி சொல்வதற்கு தாம் எப்பவும் வரத்தயார் எனவும், மக்களவையினர் செயலுக்கு தாம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர்கள் கூறியது கண்டு தான் பெருமையடைந்ததாகவும் தேசியத்தலைவரால் பரப்புரைக்காக தேசியப் பட்டியலில், நாடு நாடாக பரப்புரை செய்ய, நியமித்த ஈழவேந்தன் ஐயா குறிப்பிட்டார்.

பெரியார் கூற்றின்படி தன்மானம் இழந்தும் தமிழ்மானம் காக்க தான் உறுதி கொண்டுள்ளதகவும் இந்தியாவில் இருந்து இரண்டு தடவைகள், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவேளையிலும், ஈழத் தமிழருக்குப் பரப்புரை செய்ததற்காக அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட அந்த நாவின் வல்லவன் கூறினார்.

இன்றுவரை, மக்களவை நிர்வாகம் மௌனம் சாதிப்பது அவர்களுடைய கொள்கையை, அவர்களின் மனப்போகை திட்டவட்டமாகக் எடுத்துக் கூறுவதாகவே அமைகிறது. இந்தக் கொடிய நிகழ்வு கனடாத் தமிழருக்கு மட்டுமல்ல உலகத் தமிழருக்கும் வேதனையும், வெட்கமுமான ஓர் விடயமாகும்.

அவரை இம்சைப்படுத்தி, அவமானப்படுத்தியவர்களின் வயதை விட ஈழவேந்தன் ஐயாவின் ஈழத்தமிழ்ர்களின் விடிவுக்கான போராட்ட்தின் இடைவிடாத பங்களிப்பின் வயதோ பலமடங்கு. ஈழவேந்தன் ஐயா ஒரு பகுதிநேர ஈழப் போராளி அல்ல, தந்தை செல்வா காலம்தொட்டு இன்றுவரை தொடர்ந்து முழுநேரப் போராளியாக செயற்பட்டு வரும் ஈழத்தாயின் ஓர் இணையற்ற புதல்வன்.

இந்தத் தண்டனையைப்பெற அவர் செய்த குற்றம்தான் என்ன? தன் மொழிக்கும், தனது இனத்தின் விடுதலைக்கும் ஏறக்குறைய 60 வருடகாலமாக அயராது உழைத்தது, உழைப்பது தவறா? அல்லது தேசியத் தலைவரின் கொள்கைக்கு அமைய இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத்தை அமைக்க, தேசியத் தலைவரின் இலட்சியப் பாதையில் ஈழவேந்தன் ஐயா பயணிப்பது தப்பா? அவரின் கழுத்தைப் பிடித்து தள்ளியவர்களே சொல்லுங்கள்.

இந்த நிகழ்வு கனடா வாழ் தமிழருக்கு இழிவாக அமைந்தாலும், ஈழவேந்தன் ஐயாவுக்கு இது ஓர் பெருமைப்பட வேண்டிய விடயமாகும். தன் இனத்திற்காக இலங்கையில் சிங்களவனிடமும் கனடாவில் மக்களவையினரிடமும் (NCCT) அடிவாங்கிய ஒரே ஒரு மறத்தமிழனும், பாராளுமன்ற உறுப்பினரும் இவரே. தள்ளாத வயதிலும் தனியொருவனாக போரிட்டு தப்பிவந்த உங்கள் வீரத்தை, தீரத்தைக் கண்டு உலகத் தமிழினமே உன்னைச் சிரம்தாழ்த்தி வணங்குதய்யா.

ஈழவேந்தன் ஐயாவின் ஆழ்ந்த அரசியல் அனுபவத்தை எண்ணாது, 78 வயதிலும் காலை 8 மணிக்கே தமிழருக்கான பணியை ஆரம்பிக்கும் அவர் செயலை உணராது, அன்னாரின் அறிவை, ஆற்றலை, அனுபவத்தை மதிக்காது மக்களவையினர் செய்த மனிதாபிமானமற்ற செயலை உலகெலாம் வாழும் ஈழத் தமிழர் சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசின் கல்வி, கலாச்சார, உடல்நல அமைச்சு வன்மையாகக் கண்டிக்கிறது.

எமது பண்பாட்டுக்கு முரணான, எங்கள் கலாச்சாரத்துக்கு எதிரான, எம் பழக்க வழக்கத்துக்கு மாறான இச்செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல், இவர்கள் எம் மக்களின் சீற்றத்துக்கு ஆளாவதை யாராலும் தடுக்கமுடியாது.

கலாநிதி ராம் சிவலிங்கம்
கல்வி, கலாச்சார, உடல்நல அமைச்சு
நாடுகடந்த தமிழீழ அரசு
r.sivalingam@tgte.org

3 Responses to தேசியத்தலைவரால் பரப்புரைக்காக அனுப்பிய ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப் பிடித்து தள்ளியவர்கள் யார்?

  1. தமிழன் இத்தனை அவலத்திற்கும் அழிவிற்கும் உற்பட்ட பின்னும் திருந்தும் வழி காணவில்லை. இன்றைய அவலநிலை போக்க ஒற்றுமையே அவசியம். ஐயா ஈழவேந்தன் அவர்களுக்கு ஏற்பட்ட அவமரியாதைக்கு அவர்கள் நிச்சயம் மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும். அவரது அகவையை எண்ணியாவது இவர்கள் இந்த கொடூஞ் செயலை தவிர்த்திருக்கலாம். இந்த நிகழ்வை வைத்துக்கொண்டு எம்முள் பிரிவினையை தோற்றுவிக்க எதிரிகள் முயலலாம். நீங்கள் அனைவரும் தலைவரின் வழி நின்றே தமிழனத்திற்காக குரல் கொடுக்கின்றீர்கள். இனியாவது ஒன்று பட்டு நில்லுங்கள். எம் தலைவரின் பெயரைக் கெடுக்காதீர்கள். எமக்காய் தம் அனைத்தையும் இழந்து போராடிய அந்த மாவீரர்களின் நாமத்தால் கேட்டுக் கொள்கின்றேன். ஐயா உங்களுக்கு ஏற்பட்ட அவமாரியாதைக்கு நாம் அவர்களின் சார்பில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.ஈழத்தமிழன் என்ற உரிமையில்.

     
  2. The truth is those youngsters never born in SriLanka and even don't know how to read and write in proper Tamil( I am challenging them that they have zero knowledge in both writing and reading Tamil), but those youngsters didn't want this old man became popular by taking a photo with "Young lady Rathika" and "Old man Jack Layton",It is the way our younger generation behave to achieve Tamil Eelam.First learn the Tamil then pull the Eela Venthan Aya! Shame on you guys and you guys just show of to others and to attract others that they are working for Tamil Eelam, i am again challenging they're just talking about our struggle without knowing and depth of that! "Eedu Suraikai Kariku Uthavathu"

     
  3. மேலே உள்ள கருத்தின்படி இளைஞர்களோ அன்றி வேறு தமிழர்களோ செய்திருப்பின் அவர்களின் அறியாமைக்கு நாம் பொறுப்புடன் முதலில் அவர்களுக்கு தகுந்த விளக்கம் கொடுக்கவேண்டும். அவர்கள் செய்த தவறை உணர்த்தி புரியவைத்தால் இளைஞர்கள் நல்லவர்கள் புரிந்து கொள்வார்கள். எமது ஒற்றுமைக்கு பங்க்ம் விளையாமல் பார்த்து கொள்வது அவசியம்.

    அன்றி தெரிந்து வேண்டுமென்றே நடந்துகொண்டவர்களாயின் அதைஒன்றும் செய்ய முடியாது.உண்மையை பொதுமக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டிவிட்டு நமது பாதையில் தொடர்வதுதான் நல்லது என எண்ணுகிறேன்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com