ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் நடைபெறும் ஈழத் தமிழர் இனப்படுகொலை தொடர்பாக விவாதிக்கப்படும் கூட்டத்தில் பங்கேற்பதற்கு, மதிமுக பொதுச் செயலர் வைகோ இன்று பெல்ஜியம் புறப்பட்டார்.
இது தொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு அமைப்பு, ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கூட்டம், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஜூன் 1-ம் தேதி நடக்கிறது.
இந்த கூட்டத்தில் ஈழத் தமிழர்கள் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றுமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பாளருமான பால்மர்பி அழைப்பு விடுத்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து இந்தக் கூட்டம் முடிவு எடுக்க இருக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்காக வைகோ இன்று இந்திய நேரப்படி அதிகாலை ஒரு மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரஸ்ஸல்ஸ் நகருக்குப் புறப்பட்டு சென்றார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர் இனப்படுகொலை தொடர்பாக விவாதிக்க பெல்ஜியம் புறப்பட்ட வைகோ
பதிந்தவர்:
Anonymous
30 May 2011



0 Responses to ஈழத் தமிழர் இனப்படுகொலை தொடர்பாக விவாதிக்க பெல்ஜியம் புறப்பட்ட வைகோ