Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தற்பொழுது எங்கு பார்த்தாலும் ஒரே பதற்றம்! இலங்கை பற்றிய ஐ. நா. குழு அறிக்கை வெளியாகியதிலிருந்து இலங்கை அரசு செய்வது அறியாது இன்னும் அதிர்ச்சியிலேயே உள்ளது.

புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் இந்த அறிக்கையை எவ்வாறு பயன்படுத்துவர்? இவ் அறிக்கை விடயத்தில் இந்திய அரசு எங்களுக்கு துரோகம் செய்து விடுமா?
அமெக்கா எமக்கு கை கொடுக்குமா? சீனா, ரஷ்யா, இந்தியா இணைந்தால் இவ் அறிக்கை சார்பாக முடிந்து விடுமா என்று பல அர்த்தமுள்ள அர்த்தமற்ற சிந்தனைகளில் உள்ளார்கள்.

சர்வதேச மனித உமை அமைப்புக்களான சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்காணிப்பகம், வேறு சில அமைப்புகளும் இந்தியாவை நியாயத்தின் பக்கம் ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசியர் ஜி. எல். பீஸ் இந்தியா சென்றார். அங்கு இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் திருப்தியின்மை காரணமாக உடன் சீனாவுக்குச் சென்றுவிட்டார்.

தமிழ் நாட்டின் தலமைச்சராக கடந்த வாரம் பதவியேற்ற செல்வி ஜெயலலிதா ஜெயராம் இலங்கையின் போர்க் குற்ற விடயத்தில் மத்திய அரசு மிகவும் கடுமையாக இருக்க வேண்டுமென ஏற்கெனவே அறிக்கையும் எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளார்.

இலங்கை விடயத்தில் ஐ. நா. வினால் வெளியிட்ட அறிக்கைக்கு இந்தியாவிற்கு எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் சகலராலும் கொடுக்கப்படுகிறது என்பதை நாம் ஒருகணம் சிந்திக்க வேண்டும்.

தலைவர் கூறியது முப்பது வருடங்களுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வெற்றி நடை போட்டு இலங்கை அரசிற்குச் சமனாக ஓர் தமிழீழ அரசை அமைத்து அதற்குரிய கட்டமைப்புகளுடன் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக நடத்திய தமிழீழத் தேசியத் தலைவர் தனது 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாவீரர் உரையில் கூறியவற்றை நாம் இங்கு மீள் ஆய்வு செய்வது மிக மிக அவசியமானது.

““கனிந்து வருகின்ற இந்த கால மாற்றத்திற்கு ஏற்ப, இந்தியா பேரரசுடனான அறுந்து போன எமது உறவுகளை, நாம் மீளவும் புதுப்பித்து கொள்ள விரும்புகிறோம்'' இதனை தொடர தலைவர் கூறியது; ““.... இனவாத சிங்கள அரசு தமது கபட நாடகங்களால், எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்தியா ஆட்சி பீடத்திற்குமிடையே பகைமையை வளர்த்து விட்டது.'' மேலே கூறப்பட்ட வசனங்கள், பத்திகள் யாவும் தேசியத் தலைவனால் கூறப்பட்டவை என்பதை உலகத் தமிழர் யாவரும், விசேடமாக நாடற்று நிலம், மொழி, கலை, கலாசாரமற்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தம்மை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் எனக் கூறும் ஒவ்வொருவரும் தமது மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது.

இறுதிப் போல் மட்டுமல்லாது, முன்பும் இந்தியாவின் நகர்வுகளையும் இலங்கைக்கு உதவியாக இந்தியா நின்று நடத்திய நாடகங்களை எமது நம்பிக்கைக்குய பெரும் தலைவன் அறியாதவை அல்ல! புலம் பெயர் வாழ் மக்கள் இறுதியாக நடந்து முடிந்த முள்ளிவாய்க்காலின் பின்னர் உள்நாட்டில் வாழும் மக்கள் பலமிழந்து, உடைமைகளிழந்து, அகதி முகாம்களிலும், தடுப்பு காம்களிலும், வாழ்ந்து வரும் வேளையில் பலமுள்ள புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் பிரிவுகளையும், புதிய சங்கங்களையும், புதிய இணைய தளங்களுடன் சில புதிய தலைவர்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. தேசிய தலைவர் காட்டிய, கூறிய, அறிவுரைகளையும், வழிவகைகளையும் கையாளாது, தேசியத் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்ற புதிய ஏற்பாட்டுடன் புதிய சங்கங்களும், புதிய தலைவர்களும் தலைவர் கூறிய உபதேசங்களை ஓரம் கட்டி விட்டு போட்டி போடுகின்றன. இவை இன்றும் தொடருகிறது.

எது என்னவாக இருந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின், தலைவர் பிரபாகரனின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் ஒவ் வொருவரும் தமது விதண்டாவாதங்களையும் கைவிட்டு விட்டு, தலைவர் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கூறிய விடயங்களுக்கு தன்மை கொடுக்க வேண்டும்.

ஏற்கெனவே அவர் கூறியது போல் இந்தியா என்ன செய்தது, செய்கிறது என்பதை ஈழத் தமிழர் மட்டுமல்லாது, உலகத் தமிழர் உட்பட முழு உலகமே அறிந்துள்ளது.

ஆனால் தலைவர் வழி வந்த ஒவ்வொருவரும் தலைவன் வழிகாட்டல்கள், அறிவுரைகளுக்கு ஏற்ப நடப்பதே இவர்கள் தலைவருக்கும் அவரது விடுதலை இயக்கத்திற்கும் கொடுக்கும் மரியாதை, பண்பு. ஆகையால் புதிய அரசியல் தத்துவங்களையோ, உபதேசங்களையோ, தத்தமது தேவைக்கு ஏற்றவாறு, உணர்ச்சி வசப்பட்டு ““நாம் சொல்வது தான் சரி, நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என பிடிவாதம் பிடிக்காது, மீண்டும் யாவரும் தலைவன் பெயரால் ஒற்றுமைப்பட்டு தலைவன் கூற்றுக்கு பணிய வேண்டும்.

ஐ. நா. அறிக்கை இன்று நமக்கு கிடைத்திருக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம் ஐ. நா. வினால் வெளியிடப்பட்ட அறிக்கை. இவ்விடயத்தில் இந்தியா எமக்கு ஆதரவு வழங்குமா? வழங்காதா? என்பது குறித்து அலட்டிக் கொள்ளாது, தலைவர் கூறியது போல் உரிமையுடன் இந்தியாவிடம் நாம் செல்ல வேண்டும். இந்தியா என்பது காங்கிரஸ் கட்சி மட்டும் அல்ல! இந்திய அரசு என்பது காங்கிரஸால் அமைக்கப்படும் அரசாங் கம் மட்டுமல்ல! இந்தியா என்பது தலைவர் கூறியது போல் ஓர் பேரரசு! இந்தியாவிற்கு ஈழத் தமிழ் மக்களை தேடி வர வேண்டிய அவசியம் கிடையாது.

நாம் உலக வரலாறுகளை புரட்டிப் பார்க்க வேண்டும். அயல் நாட்டின் நட்பு உதவி இல்லாது உலகில் எந்த விடுதலை போராட்டம் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. பங்களாதேஷ், எத்தியா, கிழக்கு தீமோர், கோசோவா, தென் சூடான் ஆகியவற்றின் சரித்திரங்களைப் பாருங்கள். நாம் எமது தனிப்பட்ட சுயநலங்களை களைந்து, நமது இனத்தின் விடுதலை என்ற பொது நோக்குடன் சிந்திக்க வேண்டும். புலம்பெயர் சங்கங்களும் தலைவர்கள் இந்தியாவை வெறுப்போம் என்று தமது சுயநலத்திற்காக கூறுவதை விட்டு, இவ்விடயத்தில் புலம்பெயர் வாழ் மக்களின் தலைவன் பொன்வாக்கை நிறைவுபடுத்த வேண்டும். நாம் இந்தியாவுடனான நட்பினை தேடிச் செல்ல காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் நமது இனத்தின் அழிவுக்கு நாம் வழி கோலுகிறோம் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

சிங்கள அரசிற்கும், சிங்கள மக்களுக்கும் தெந்த ராஜதந்திரத்திலும் பார்க்க பல மடங்கு திறமையாக எம்மால் இந்தியாவின் துணையுடன், அதன் தற்படியாக ஐ. நா.
அறிக்கைக்காக ஆதரவை நாம் பெற வேண்டும்.

இதற்கு ஏற்றாற்போல் தமிழ் நாட்டில் ஓர் பெரும்பான்மை அரசு, ஈழத் தமிழர் விடயத் தில் மிகவும் அக்கறையாக செயற்படவுள்ள இவ்வேளையில் நாம் எமது குறுகிய மனப் பான்மையால், தலைவர் கூறியதையும் அலட் சியம் பண்ணி இந்தியாவின் ஆதரவை நாடத் தவறும் பட்சத்தில் எமது மிச்ச சொச்ச இருப்புக்களையும் குழிதோண்டி புதைக்க நேடும்.

முன்னைய இலங்கையின் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன சிங்கள மக்களுக்கு 1987 ஆம் ஆண்டு கூறியதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

““நாம் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளின் உதவியை நாடினோம். அவ் நாடுகள், இவ்விடயத்தில் இந்தியாவின் நிலை என்னவெனவே எம்மிடம் கேட்டார்கள். தாம் இந்தியாவின் கொள்கைக்கு எதிராக ஒரு பொழுதும் இந்து சரித்திரப் பிராந்தியத் திற்குள் வர மாட்டோமென மறுத்து விட்டனர்.'' என்பதாகும்.

ஆகையால் எமது இனத்திற்கான விடுதலை யின் சிந்தனையைக் கொண்ட ஒவ்வொருவரும், இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு முன்வர வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையாக இருந்தாலென்ன, பாதுகாப்புச் சபையாக இருந்தாலென்ன மனித உரிமைச் சபையாக இருந்தாலென்ன, ஈழத் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்கள் ஏதும் இந்தியாவின் ஆதரவு இல்லாது ஒரு சாண் தன்னும் அசையாது என்பதே யதார்த்தம்.

இக்கட்டுரையை படித்து விட்டு இவரும் இந்தியாவிடம் விலை போய் விட்டார் என விரும்பியவர்கள் கூறலாம். ஆனால் இந்தியா வின் ஆதரவு இல்லாது எதையும் அடைய முடியாது என்பதே யதார்த்தம்.

0 Responses to நிபுணர்குழு அறிக்கை குறித்து இலங்கைத் தமிழர் செய்யப்போவது என்ன? - ச.வி.கிருபாகரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com