Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனல் 4 ஒளிபரப்பிய "இலங்கையின் படுகொலைக்களம்" காணொளியானது விடுதலைப்புலிகளின் பணத்துக்காக மேற்கொள்ளப்பட்ட போலி ஒளிப்பதிவுகள் என்று கோத்தாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

இலங்கை அரசாங்கத்தை அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் விடுதலைப் புலிகள் தங்கள் பணத்தைக் கொண்டு மீண்டுமொரு முறை செனல்-04 தொலைக்காட்சிச் சேவையை பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கின்றார்.

இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்ததாக குறிப்பிடப்படும் காட்சிகள் அனைத்தும் வஞ்சக நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட போலியான ஒளிப்பதிவுகள் மட்டுமன்றி அதற்காக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிடமிருந்து பெரும் தொகைப்பணம் கைமாறியுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவம் எந்நேரமும் பொதுமக்களைப் பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டது. அப்பாவிப் பொதுமக்கள் ஒருபோதும் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படவில்லை.

அத்துடன் சரணடைந்தவர்கள் தொடர்பிலும் மனிதாபிமான அடிப்படையிலேயே இராணுவம் நடந்து கொண்டது. அதன் காரணமாகவே கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி, பிள்ளைகள் மற்றும் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் மனைவி உட்பட மொத்தம் பதினோராயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாய், தந்தையரும் கடைசிக்காலத்தில் இறக்கும் வரை இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் அரசாங்கத்தினாலேயே நல்ல முறையில் பராமரிக்கப்பட்டிருந்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 Response to சனல் 4 காணொளி விடுதலைப்புலிகளின் பணத்தின் போலி ஒளிப்பதிவுக்காட்சிகள்: கோத்தாபய

  1. தம்பி நீ மாட்டிப்போட்டாய் தப்பமுடியாது நீங்கள் யாரோடு விளையாடுகின்றீர்கள் தமிழர்களை முன்பு ஏமாத்தியதுபோல் இனி உலகத்தையும் ஏமாத்த முயலும் போது அதன் விளைவே எமது விடுதலைப்போராடத்தின் பெறுமதி உங்களுக்குப் புரியும் பொறுத்திரும் தமிழன் உலக மேசையில் இருக்கின்றான்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com