Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனல் 4 காணொளியில் வன்னிப் படுகொலைக்களம் காண்பிக்கப்பட்டபோது அதன் அறிவிப்பாளர் இப்படியொரு பாரதூரமான மனிதநேயமற்ற படுகொலை நடைபெற்றபோது ஐ.நா என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்வியை எழுப்புகிறார்.

அந்த நேரம் எதுவுமே செய்யாத ஐ.நா அதற்குப் பிறகாவது என்ன செய்தது என்றும் வினவுகிறார். எதுவுமே செய்யவில்லை என்கிறார் தகவல் தரும் வாணி குமார் என்ற பெண்மணி. சம்பவம் முடிவடைந்த இடத்தை வெறும் சகட்டுமேனிக்கு ஐ.நா செயலர் பான் கி மூன் வானத்தில் பறந்தபடி பார்த்தார். வெறும் 15 நிமிடங்கள் அங்கு நின்று மாலை மரியாதைகளை இராணுவத்திடம் ஏற்றுக் கொண்டுவிட்டு பறந்துவிட்டார்.

இத்தனை கொலைகளையும் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்த ஐ.நாவின் இரும்பு இதயத்திற்கு போடப்பட்ட பாராட்டு மாலையாகவே அது தெரிகிறது. போர்க்குற்ற அறிக்கையை ஐ.நா வெளியிட்டாலும் மேற்கொண்டு தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று பான் கி மூன் கூறியுள்ளார். ஆனால் ஐ.நா பாதுகாப்பு சபையில் சிறீலங்காவுக்கு எதிராக ஏகமானதாக போர்க்குற்ற பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று மனித உரிமைக்கழகம் வலியுறுத்துவதும் காண்பிக்கப்படுகிறது.

0 Responses to தமிழ் மக்களின் இரத்தக் கடலில் மாலை சூடிவரும் மன்னவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com