Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேச சட்டங்களுக்கு முரணாக சிறீலங்கா அரசு வைத்தியசாலைகளுக்கு குண்டு வீசித்தகர்த்தது. ஒரு தடவை மட்டுமல்ல பல தடவைகள் குண்டு வீசி காயப்பட்டவர்களை கொன்று தள்ளியது.

யாதொரு வைத்திய வசதியோ, மருந்தோ, மின்சாரமோ எதுவுமற்ற வன்னி வைத்தியசாலை ஷெல் தாக்குதலால் சின்னாபின்னமாகித் தெறித்துக் கொண்டிருந்தது. பல நூற்றுக்கணக்கான காயப்பட்டவரை உள்ளே வைக்க இடமின்றி வெளியில் வைக்க அங்கும் ஷெல் அடித்து கொன்றார்கள்.

கொட்டும் மழையில் இரத்த வெள்ளம் வைத்தியசாலையில் வழிந்தோடியது. கேட்கப்பார்க்க நாதியின்றி வெட்கம் கெட்ட உலக சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. வைத்தியசாலை மீது குண்டு வீசப்பட்டது அப்பட்டமான போர்க்குற்றம் என்பதற்கு வாணி குமார் நல்லதோர் சாட்சியமாக இருக்கிறார்.

முதியவர் ஒருவர் படுகொலை மயமாக இருக்கிறது என்று கூறுகிறார். நாலாவது நாள் அவரே வைத்தியசாலையில் குண்டு வீச்சுக்கு பலியாகி இறந்து கிடக்கிறார். காயத்தில் அவலக்குரல்கள் வானைப் பிளக்கின்றன. வானம் கண்ணீர் விடுகிறது.. கொலை அலறல் கேட்டுக் கொண்டிருக்கிறது.

சனல் 4 வெளிக் கொண்டுவந்திருப்பது சிறிய காணொளியே இதன் உண்மை வடிவங்கள் மேலும் அம்பலமானால் இன்னும் பலரது முகமூடிகள் கிழிந்து சின்னாபின்னமாகும்.

0 Responses to வைத்தியசாலை மீது குண்டு வீசப்பட்டது அப்பட்டமான போர்க்குற்றம் என்பதற்கு வாணி குமார் நல்லதோர் சாட்சியம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com