Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பேய் வெறி கொண்டாடும் சிங்கள கொலைஞன்!

பதிந்தவர்: தம்பியன் 15 June 2011

படுகொலைக் களத்தில் பெண்களை மடக்கிப் பிடித்து, கட்டித் தூக்கி அகப்பட்ட அனைவரையும் பாலியல் பலாத்காரம் செய்தது சிங்கள இராணுவம் என்று ஒரு தமிழ் பெண் சாட்சியமளித்தார்.

கொலை செய்யப்பட்ட போராளிகளையும், பொது மக்களையும் நிர்வாணப்படுத்தி வேடிக்கையாக கேலி செய்கிறார்கள். மனித இனம் என்று சொல்வதற்கே வெட்கமான செயலை சிறீலங்கா இராணுவத்தினர் இறந்த உடலங்களின் மீது செய்வதை தெளிவாகக் காண முடிகிறது.

இவ்வளவு இரத்தக் காட்டுக்குள் சிங்கள இராணுவ கொலைஞன் ஒருவன் முகத்தைக் காட்டி பேய் போல சிரிக்கிறான்.. கைகளை கட்டி, கண்களையும் கட்டிவிட்டு துப்பாக்கியால் மிக அருகில் சுடுகிறார்கள். இந்தச் செயலை பொது மக்கள் எவரையும் கொல்லாத போர் என்று சிங்கள ஆட்சியாளர் கூறுவதாக சனல் 4 தெரிவித்தது.

கடுகளவும் மனித மரியாதையற்ற இந்த மிருகங்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கியதில் தவறென்ன உண்டு என்ற கேள்வியை எழுப்புகிறது இந்த நிகழ்வு. நரபலி எடுக்கும் பேய்களின் கூட்டமாக இது தெரிகிறது.

2 Responses to பேய் வெறி கொண்டாடும் சிங்கள கொலைஞன்!

  1. எனவே விடுதலைப்புலிகள் இயக்கம் சிங்கள , அதன் கூட்டாளிகளுக்கெதிராக போரிட்டதை நியாயமான போர் என்றே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது

     
  2. "எனவே விடுதலைப்புலிகள் இயக்கம் சிங்கள , அதன் கூட்டாளிகளுக்கெதிராக போரிட்டதை நியாயமான போர் என்றே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது"

    இக்கருத்தை நானும் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com