பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனை விடுதலை செய்ய வேண்டும்’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து, அவர் நேற்று வெளியிட்ட கேள்வி – பதில் அறிக்கை:பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவிட்ட காரணத்தால், அதையே அவர்கள் அனுபவித்த முழு தண்டனையாக எண்ணி, விடுதலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என, மத்திய அரசை தி.மு.க., கேட்டுக் கொள்கிறது.நில அபகரிப்பு குறித்து, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது, அ.தி.மு.க.,வினரே கூறியுள்ள புகாருக்கு, அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.
துரியோதனனாக என்னை விமர்சிக்கக் கூடாது என கூறியுள்ள ஜெயலலிதா, துரியோதனன் சாகும் வரை முடிசூடா மன்னனாக இருந்தான். கருணாநிதி, தமிழக மக்களால் ஓட ஓட விரட்டப்பட்டவர் என கூறியுள்ளார். ஏன்? 1996 மற்றும் 2006ல், தமிழக மக்களால் ஜெயலலிதா விரட்டப்படவில்லையா?தேர்தலுக்காக, இப்தார் விருந்தில் நான் கலந்து கொண்டேன் என விமர்சிக்கும் ஜெயலலிதா, 1991 முதல் 96 வரை நடந்த இப்தார் விருந்துகளில் கலந்துகொள்ளவே இல்லை. ஏன்?இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.



0 Responses to ஓட ஓட விரட்டப்பட்டேனா? கருணாநிதி கேள்வி