Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் கயல் என்கிற அங்கயற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்கள். அதையடுத்து கோயம்பேட்டில் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற 3 பேரின் தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், தூக்கு தண்டனையை நிறைவேற்ற 8 வாரத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதே நேரத்தில் 3 பேரின் தூக்குத் தண்டனையை ஜனாதிபதி ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பெண் வக்கீல்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து உண்ணாவிரதம் இருந்த கயல் என்கிற அங்கயற்கண்ணி கூறுகையில், ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு காரணமாகவும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது காரணமாகவும் எங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளோம்'' என்றார்.

0 Responses to உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டோம்: பெண் வக்கீல்கள் அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com