Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யேர்மன் வாழ் தமிழ் மக்களுக்கு நாளைய கவனயீர்ப்பு நிகழ்வுகள் காரணமான அவசரமான அறிவிப்பு.

மரண தண்டனை தீர்க்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் அவர்களின் வழக்கு செயல் முறையை மனிதாபிதமான முறையில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதையும் அதற்கு அப்பால் அவர்களின் கொடுமையான மரணதண்டனையை கடுமையாக கண்டித்தும் நமது இலக்கை எட்டும் வரை வீரமங்கை செங்கொடி விட்டுச்சென்ற போராட்டத்தைத் தொடர்வோம் என்ற உறுதியோடு தமிழக மக்களின் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் யேர்மனியில் தொடர்ந்து நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளின் தகவல்கள் பின்வருமாறு:

Berlin
01.09 .2011
16:30 - 18.30
Indische Botschaft ( இந்திய தூதரகம் )
Tiergartenstraße 17, 10785 Berlin

Frankfurt
01.09 .2011
13:00 - 17: 00
Indisches Generalkonsulat

Essen
01.09.2011
17:00 மணி
Auf dem Willy -Brandt platz 1
Essen

அத்தோடு முன்னர் அறிவித்த Bonn நகரத்தில் மனுகையளிப்பு மட்டும் நடைபெறும் என்பதால் இன்று(31 .08 .2011 ) Bonn /Rheinsieg தமிழர் கலாச்சார அமைப்பால் Amnesty International Bezirksbüro மனு கொடுக்கப்படும் .கவனயீர்ப்பு நடைபெறாது .
இறுதியாக Aachen நகரத்தின் Menschenrechtsverein für Migranten e.V மனுகையளிப்பு அவர்களால் நிர்வாகரீதியாக பெர்லின் நகரத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது .
நிகழ்வுகளின் திடீரான தகவல் மாற்றங்களுக்கு வருந்துகிறோம்.

நன்றி
யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை

0 Responses to யேர்மன் வாழ் தமிழ் மக்களுக்கு நாளைய கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com