ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி கடந்த 28.08.2011 அன்று காஞ்சீபுரத்தில் மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த இளம்பெண் செங்கொடி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தீக்குளித்து இறந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான மேல்கதிர்பூர் மங்களம்பாடி கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அங்குள்ள மக்கள் மன்ற அலுவலகத்தில் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.
செங்கொடியின் உடல் அடக்கம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்ததால் உடல் அடக்கத்தை ஒரு நாள் தள்ளிவைக்க மக்கள் மன்றம் முடிவு செய்தது. அதன்படி நேற்று வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்தது. 8 வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனை அடுத்து செங்கொடியின் உடல் அடக்கம் இன்று (31.08.2011) நடக்கிறது. செங்கொடியின் உடலுக்கு பேரறிவாளனின் தாயார் அர்ப்புதம்மாள் அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல் நடிகர் சத்தியராஜ், இயக்குநரும் நடிகருமான சேரன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் எம்எல்ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.



0 Responses to வீரமங்கை செங்கொடி உடலுக்கு பேரறிவாளன் தாயார் அஞ்சலி