மூன்று தமிழர்கள் உயிர்காப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை 8 வாரக் காலத்திற்கு உயர்நீதிமன்றம் தள்ளிவைத்து இருக்கிறது. அவர்களின் தண்டனை நிரந்தரமாக இரத்து செய்யப்படுவதற்கு முன்னோட்டமாக இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. இதற்காக நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மற்றும் வழக்கறிஞர்களுக்கு குழுவின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
சட்டமன்றத்தில் மூவரின் மரண தண்டனையை இரத்து செய்யும்படி குடியரசுத் தலைவரை வற்புறுத்தும் தீர்மானத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் முன்மொழிந்து அனைத்து உறுப்பினர்களாலும் ஆதரிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு இருப்பதை மனமாறப் பாராட்டுகிறேன். இதற்குக் காரணமான முதலமைச்சருக்கு தமிழர்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்களின் ஒன்றுபட்ட போராட்டமே இந்த விளைவுகளுக்கு காரணம் என்பதை உணர்ந்து தொடர்ந்து மரண தண்டனையை அறவே ஒழிக்கும் வரை ஒன்றுபட்டுப் போராட உறுதி பூணுவோம்.
இப்படிக்கு
பழ.நெடுமாறன்
ஒருங்கிணைப்பாளர்
3 தமிழர்கள் உயிர்காப்பு இயக்கம்



0 Responses to சட்டமன்றத் தீர்மானம் - முதலமைச்சருக்குப் பாராட்டு: பழ. நெடுமாறன்