லிபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள நபஸா மலைப்பகுதியில் 34 சடலங்கள் ஒரு புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளன. சிறீலங்காவின் பூசா முகாம் போல இந்த நபூசா பகுதி இருந்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கைகள் இரண்டும் பின்புறமாக முடியப்பட்டு சுடப்பட்டுள்ளனர்.
சனல் 4 தொலைக்காட்சியில் சிறீலங்கா படைகள் கண்களையும், கைகளையும் கட்டிவிட்டு போராளிகளை சுட்டதுபோல இவர்களும் சுடப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரையும் கொன்றது கொடிய சர்வாதிகாரி கடாபியின் படைகளே என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள். அவர்களுடன் அவர்களின் பிள்ளைகளும் சேர்த்து குடும்பமாக கொன்றொழிக்கப்பட்டுள்ளது. இது மோசமான மனித உரிமை மீறல் என்று மனித உரிமைக்கழகத்தை சேர்ந்த பீற்றர்புக்காரற் தெரிவித்தார்.
இது ஒரு புறம் நடைபெற லிபியாவின் கூட்டாளி நாடான சீனா தனது நாட்டின் சிங்ஜாங் பகுதியில் போராட்டங்களை நடாத்திய நால்வரை பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டி தூக்குத் தண்டனை விதித்துள்ளது. சீனாவின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே இவ்விதம் தண்டனை பெற்றுள்ளார்கள்.
கம்யூனிசம் பேசினாலும் தனது மக்களிலேயே சிறுபான்மையினரை ஒடுக்கும் தீய பழக்கமுள்ள சீனா இலங்கையிலும் பெரும்பான்மை சிங்களவருக்கு ஆதரவளித்தது வியப்பிற்குரிய செயல் அல்ல. இந்த நால்வரோடு மேலும் இருவருக்கு 19 வருடங்கள் கொடுஞ்சிறை விதித்துள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் இந்த நாட்டின் இரும்பு சட்டங்களை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
சிறீலங்கா பூசா போல, லிபியாவில் நபூசா புதைகுழிக்குள் 34 சடலங்கள்
பதிந்தவர்:
தம்பியன்
15 September 2011



0 Responses to சிறீலங்கா பூசா போல, லிபியாவில் நபூசா புதைகுழிக்குள் 34 சடலங்கள்