Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேச சட்டத்தை மதிக்காத சீனாவுடன் கைகோர்க்கும் சிறீலங்கா சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற முடியுமா..?

கடாபியின் படைகளுக்கு ஆயுதங்களைக் கொடுப்பது சர்வதேச குற்றச் செயல்..
கடாபியின் விமானங்கள் சர்வதேச வான் பரப்பில் பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும்..
சொந்த மக்களையே கொன்ற கடாபி சர்வதேச போர்க்குற்ற நீதிமன்று கொண்டுவரப்பட வேண்டிய குற்றவாளி..

அவருடன் வர்த்தகம் செய்வது குற்றச் செயல்..
அவருடைய சொத்துக்கள் யாவும் உலக நாடுகளில் உறைய வைக்கப்பட்டுள்ளன..

ஐ.நாவில் கடாபிக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய விடயங்கள் மேலே சொல்லப்பட்டுள்ளன..

உண்மை நிலை இப்படியிருக்க..

ஐ.நா தடைகளுக்கு முரணாக சீனா கடாபியின் படைகளுக்கு ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் வழங்கியுள்ளது…

கடந்த யூலை மாதத்தில் இருந்து சீனாவின் கப்பல்கள் மிக இரகசியமான முறையில் அல்ஜீரியா, தென்னாபிரிக்கா போன்ற நடாடுகளின் வழியாக திருட்டுத்தனமாக இந்த ஆயுதங்களை அவருடைய படைகளுக்கு அனுப்பியிருக்கிறது.

சுமார் ஒரு பில்லியன் குறோணர்கள் பெறுமதியான ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் சீனா வழங்கியுள்ளது. இவற்றை ஆதராமாக வைத்தே கடாபியின் படைகள் பொது மக்களுக்கு எதிராகவும் நேட்டோவுக்கு எதிராகவும் போரை நடாத்தி வருகின்றன. மேற்கண்ட தகவலை இன்று அதிகாலை வெளியான கனேடிய பத்திரிகையான குளோபன் அன் மெயில் அம்பலப்படுத்தியுள்ளது. கடாபியின் படைகள் திரிப்போலி நகரை விட்டு ஓடியபோது அவசர அவசரமாக வீசிவிட்டு ஓடிய சீன – லிபிய வர்த்தக ஒப்பந்தப் பத்திரங்களில் இருந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோலத்தால் இலங்கையில் நடைபெற்ற மானிடப் படுகொலைகளுக்கும், போர்க் குற்றச்செயல்களுக்குமான ஆயுதங்களை சீனா வழங்கியிருக்கிறது. சிறீலங்காவின் போர்க் குற்றம் தொடர்பான ஐ.நாவின் குற்றச்சாட்டுக்கள் மறுபடியும் இவ்வாரம் புத்துயிர் பெற இருக்கிறது. மறுபுறம் உலக நாடுகள் சிறீலங்காவிற்கு எதிராக குரல் கொடுக்க தயாராகும் நேரத்தில் சிறீலங்காவின் ஆபத்பாந்தவனான சீனாவின் தப்பான செயல் அம்பலத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் சீனாவை நம்பி வரும் சிறீலங்காவுக்கு ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்குமா என்பது பலத்த கேள்வியாக மாறியிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சிறீலங்கா – சீனா கூட்டை ஆதரிக்கப்போய் தம்மீது போர்க்குற்ற களங்கத்தைப் பூசிக்கொள்ள உலக நாடுகள் அவ்வளவு மூடர்கள் இல்லை.

இது இவ்விதமிருக்க இன்று காலை வெளியாகிய எகிப்திய பத்திரிகை செய்திகளின்படி எகிப்திய சர்வாதிகாரி கொஸ்னி முபாரக்கிற்கு எதிராக சாட்சியமளிக்க அவருடைய போலீஸ் தலைமை அதிகாரி ஒருவரும், மேலும் மூன்று போலீசாரும் முன் வந்துள்ளனர். மொத்தம் 885 பொது மக்களை கொன்றொழிக்கும் உத்தரவை பிறப்பித்த குற்றத்திற்கு தெளிவான சாட்சியம் கிடைத்துள்ளது. வழக்கின் முடிவில் கொஸ்னி முபாரக் தூக்கில் தொங்க இது போதுமான சாட்சியமே. இந்தச் செய்தி தமது சொந்த மக்களை கொன்ற குற்றவாளி அரசுகளுக்கு பேரிடியாக இறங்கியுள்ளதாக இன்றைய ஐரோப்பிய செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட சிறீலங்கா வரை நடைபெற்ற அத்தனை பொது மக்கள் படுகொலைகளும் உலக மன்றில் விசாரணைக்கு வரப்போவதை கொஸ்னி முபாரக் வழக்கு தெளிவாக விளக்குகிறது.

சிறீலங்காவின் இனவாத கட்சியான ஐ.தே.கவின் உறுப்பினர் திஸ்ச அத்தநாயக்கா சொன்னதுபோல ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் சிறீலங்கா தனித்து விடப்பட்டால் அதில் ஆச்சரியப்பட எதுவும் கிடையாது. மாறிவரும் சர்வதேச சூழல் சிறீலங்காவின் குழு கருணை மனுவுடன் விமானமேற வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது.

கிறீஸ் மனிதனும் – முருகன் – சாந்தன் – பேரறிவாளன் தூக்குக் கயிறுகளும் புகையை மூடிமறைக்க வந்த சிறிய போர்வைகளே.. தடுத்த காரணத்தால் புகை இப்போது போர்வைக்கு வெளியால் பீறி உலக மன்றுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. அது மேலும் பீறி உலக முழுதும் பரவப்போகிறது..

சிறீலங்காவின் போர்க்குற்ற விவகாரத்தில் இந்தியா அமைதியாக பின் வாங்காவிட்டால் சீனாவுடன் சேர்ந்து சேறைப் பூச நேரும்.. கடாபியின் எண்ணெயை இந்தியக் கப்பல்கள் இரகசியமாக ஏற்றிய கதையும் சர்வதேச விவகாரமாகலாம்.. இருந்தாலும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் பேரறிவாளன் விவகாரமும் வந்தால் நல்லதே.

அலைகள் மத்தியகிழக்கு தென்னாசிய விவகாரப் பிரிவு 05.09.2011

0 Responses to கடாபிக்கு இரகசியமாக ஆயுதம் கொடுத்த சீனாவின் செயல் அம்பலம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com