Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான வாகனப் பேரணியொன்று எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ளது.

தஞ்சாவூரில் உள்ள தமிழ்த்தாய் அறக்கட்டளையும், தமிழ் அமைப்புகளும் இணைந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான இந்த வாகனப் பேரணியை ஒழுங்கு செய்துள்ளன.

எதிர்வரும் 21ம் திகதி காலை ஒன்பது மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் எதிரில் ஆரம்பமாகும் வாகனப் பேரணி அடுத்த மாதம் (அக்டோபர்) 03ம் திகதி சென்னை கோட்டையை வந்தடையவுள்ளது. அதன் பின் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படவுள்ளது.

கச்சதீவை மீட்பது, இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிப்பது, தூக்குத் தண்டனைக் கைதிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளும் மேற்படி வாகனப் பேரணியின்போது வலியுறுத்தப்படவுள்ளன.

0 Responses to ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் வாகனப் பேரணி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com