நுகேகொட பிரதேசத்தில் பாலியல் தொழில் மையங்களைச் சுற்றிவளைக்கும்போது பொலிஸாரினால் கைதுசெய்யப்படும் அழகான பெண்கள், நுகேகொட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோனினால் அழைத்துச் செல்லப்பட்டு, அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலரின் பாலியல் தேவைகளுக்காக வழங்குவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் நுகேகொட பிரதேசத்தில் பாலியல் தொழில் மையமொன்றை சுற்றிவளைத்த போது அங்கிருந்த கைதுசெய்யப்பட்ட கஞ்சனா என்ற யுவதி மிரிஹான பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அங்கு சென்ற தேசபந்து தென்னகோன் அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
அந்தப் பெண்ணின் பெற்றோர் அண்மையில் சட்டத்தரணிகளுடன் மிரிஹான காவல்துறை நிலையத்திற்கு சென்று விசாரித்துள்ளனர். எனினும், அப்படியான எவரையும் தாம் கைதுசெய்யவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், அந்தப் பெண்ணை மிரிஹான பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பிரசாத் ரத்னாயக்க என்பவர் வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.



0 Responses to விபச்சார விடுதிப் பெண்களைக் கடத்தும் இலங்கைப் பொலிசார்