Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நெல்லை மாவட்டம் தென்காசியில் நேற்று இரவு நடந்த இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாநில மாநாடு மற்றும் படைப்பிலக்கிய பயிலரங்கம் நிறைவு விழா நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதில் கலந்துகொண்டு பேசினார்.

அவர், ‘’300 ஆண்டுகால தமிழக வரலாற்றில் 500க்கும் மேற்பட்ட பாவலர்களையும், எழுத்தாளர்களையும் இஸ்லாமிய சமுதாயம் வழங்கி இருக்கிறது.

தமிழ் மொழியை மட்டுமே ஆட்சி மொழியாக்க வேண்டும். அதற்கான தகுதி உள்ள ஒரே மொழி தமிழ்தான் என்று குரல் கொடுத்தவர் காயிதேமில்லத்.

இலக்கியம்தான் தமிழினித்தை பாதுகாக்கும். மொழிதான் நாட்டை வாழவைக்கும். இலக்கிய கூட்டம் நடத்துவதன் மூலம் தமிழுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற என்ண்ணம் உன்னதமானது.

சிவகங்கையை மீட்க, வேலுநாச்சியாருக்கு அஹைதர் அலி பீரங்கியும் துப்பாக்கியும் கொடுத்து உதவினார்.

சமூக நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த தமிழகத்தில் பிற்படுத்தவர்களும் இஸ்லாமியர்களூம், தலித்துகளும் ஒற்றுமையாக வாழவேண்டும்’’ என்று பேசினார்.

0 Responses to இலக்கியம் தான் தமிழினத்தை பாதுகாக்கும்: வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com