Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக டெல்லி போலீஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

பத்திரிகி ஒன்றில் அண்மையில் சுப்ரமணிய சுவாமி எழுதிய கட்டுரை ஒன்று தொடர்பாக, அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

2ஜி ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து மத்திய அரசுக்கும், சிபிஐ-க்கும் சுவாமி பல்வேறு குடைச்சல்களை கொடுத்து கொண்டிருப்பதால் காங்கிரஸ் தலைமை அவர் மீது ஏக கடுப்பில் உள்ளது.

இதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை இவ்வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் 2ஜி வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மேற்கொண்டு அவர் குடைச்சல் கொடுப்பதை தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக வழக்குப் பதிவு: விரைவில் கைது?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com