Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டனில் உள்ள மொபைல் போன் கடை ஒன்றில் பேய் உலவியதை அக் கடையில் உள்ள பாதுகாப்பு கமரா படம்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அக் கடை தனது விளம்பரத்துக்காக இப்படி ஒரு கட்டுக்கதையை வெளியிட்டுள்ளதாக சிலர் குறிப்பிட்டனர்.

கடை பூட்டப்பட்டு இருந்த இரவுவேளை கடைக்குள் ஒரு மர்மமான பெண்ணின் உருவம் தோன்றி மறைவதை கமராக்கள் துல்லியமாக எடுத்துள்ளது. இது குறித்த சர்ச்சை பெருகியதால் அக் கமராவில் பதிவான காணொளி வீடியோ எடிட் மூலம் செய்யப்பட்ட போலியான காணொளியா இல்லை உண்மையான காணொளியா என நிபுணர்கள் ஆராய விரும்பியுள்ளனர்.

இதனை அடுத்து வீடியோவை ஆராயும் நிபுணர் குழுவும் , இது தொடர்பான ஆரயும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் குறிப்பிட்ட அந்த வீடியோவை ஆராய்ந்தபோது திடுக்கிட்டுப் போனார்களாம். ஆச்சரியமான விடையம் அந்த வீடியோ உண்மையானது.

அதில் எதிவிதமான எடிட்டும் செய்யப்படவில்லை. வெட்டி ஒட்டும் வேலைகளும் நடைபெறவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். அப்படி என்றால் அங்கே வந்து மறையும் பெண் யார் என நிருபர்கள் கேட்க அது பற்றி தாம் எதனையும் கூறமுடியாது. ஆனால் நிச்சயமாக அந்த வீடியோவில் எடிட்டிங் எதுவும் செய்யப்படவில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளது மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அப்படியாயின் வந்துபோகும் உருவம் உண்மையாகவே பேய் தான் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. வீடியோவைப் பாருங்கள்.

காணொளி இணைப்பு

0 Responses to லண்டனில் பேயாம் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com