சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று வாதுவ பிரதேசத்தில் நேற்று விபத்துக்குள்ளானதாக பொலிஸாருக்கு இரு தொலைபேசி அழைப்புகள் கிடைத்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வாதுவ பிரதேசத்தில் நேற்று மாலை இச் சம்பவம் நடந்ததாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என விமானப் படை தெரிவித்துள்ளபோதும் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று குறிப்பிட்ட பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாக தமக்கு கிடைத்த தவல் பற்றி தாம் ஆராய்ந்துவருவதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் பாரிய சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து சில பகுதிகள் தீ பற்றி எரிந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் புற்கள் வறட்சி காரணமாக காய்ந்து இருந்ததாகவும் வெப்பம் காரணமாக அவை தீ பற்றி எரிந்திருக்காலாம் எனவும் பொலிசார் தற்போது கூறிவருகின்றனர்.
இருப்பினும் மக்கள் நடமாட்டம் அற்ற அப் பகுதியில் என்ன நடக்கிறது என்பது குறித்து அறிய முடிவில்லை எனவும், அங்கே பொலிசார் தடைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிர்வு



0 Responses to விமானப்படை விமானம் விபத்தில் வீழ்ந்ததா?