Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை போற்றித்துதிக்கும் மாவீரர்நாள் நிகழ்வு மொன்றியலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மாலை 6:00 மணியளவில் ஆரம்பமாகிய நிகழ்வில் எழுச்சி நடனங்களும், நாடகம் மற்றும் இசை நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வில் “வன்னிக்காட்டு வசம்” என்ற இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் மாவீரர் நாள் சிறப்பு போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றது.

இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலோடு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உறுதி மொழியோடு நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

இம்முறையும் வழமைபோல பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கான தங்கள் வணக்கத்தைச் செலுத்தினர்.



0 Responses to கனடா மொன்றியலில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு 2011 (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com