Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இதுவரை காலமும் இலங்கையில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களையும் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள், செம்பருத்தி மற்றும் உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.11.2011) அன்று இரவு 7 மணிக்கு கோலாலம்பூரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுமார் 200க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.

அகவணக்கத்துடன் ஆரம்பமான தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்வில் பொதுச் சுடரினை மலேசிய சுவாராம் மனித உரிமைக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கா.ஆறுமுகம் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் வழக்கறிஞர் சி.பசுபதி அவர்கள் ஏற்றிவைத்தார்.

இதனையடுத்து நிகழ்வுக்கு வருகை தந்த உணர்வாளர்கள், மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுச் சின்னத்தில் தமது தியாக செல்வங்களுக்கு மலர்தூவி சுடர்வணக்கம் செலுத்தினர். அதன்பின்னர் வழக்கறிஞர் பசுபதி மற்றும் கா.ஆறுமுகம் அவர்களின் உரைகள் இடம்பெற்றது.

இறுதியாக "தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்" என்ற தமிழர்களின் தாரக மந்திரத்தை அனைத்து மக்களும் இணைந்து உரத்துக்கூறி "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" பாடலுடன் நிகழ்வினை நிறைவேற்றினர்.

இவ்வருடம் மலேசியாவிலும், குவைத்திலும் தேசிய மாவீரர் தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மலேசியத்தமிழர்கள், ஈழத்தமிழர்கள் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மாவீரர் தினத்தில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வினைச் சிறப்பிக்க பல அரசியல் தலைவர்கள் சமூகம் கொடுத்தது இம் மாவீரர் நிகழ்வை மேலும் சிறப்பித்தது.
முதன்மைச் சுடரினை ஒரு மாவீரனின் தாயார் ஏற்றிவைக்க அதனைத்தொடர்ந்து ஈகைச்சுடரினை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த போராளி ஒருவர் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து மாவீரர் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன.

0 Responses to மலேசியா சிறப்பாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு 2011 (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com