Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்வதற்கு நாம் ஒரு போதும் எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் அல்லது தங்களை விடுவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தமிழக அரசு சார்பில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே மூவரையும் தூக்கிலிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தினால் 8வார இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

இதனை விசாரிக்க மேல்நீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கப்படவில்லை.

0 Responses to மரண தண்டனையை ரத்து செய்யவில்லை!: தமிழக அரசு அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com