Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கார்த்திகை 27 தமிழீழ மக்கள் மட்டுமல்ல, இன்று உலகமெங்கும் பரந்து வாழும் உலகத் தமிழர்கள் அனைவரும் கார்த்திகை 27யில் தமிழின மக்களுக்காக தமது இளமை கால வாழ்க்கையை தியாகம் செய்து தமிழீழ விடுதலைக்காக தமிழீழ மண்ணுக்கு வித்தான தெய்வங்களுக்கு தீபம் ஏந்தி வணங்கும் போது எம் தாய் மண்ணில் வாழும், அந்த மாவீரர்கள் துயிலும் இல்லங்கள் சிங்கள இனவெறிகளால் இடித்து தரைமட்டமாக ஆக்கப்பட்ட நிலையிலும் எம் மண்ணில் உறவுகள் பல வழிகளிலும் அந்த தியாகங்களுக்கு தமது மரியாதையை செய்தனர்.

இந்த வணக்க நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் சிறி லங்கா ராணுவமும், அதன் புலனாய்வு பிரிவும் பல தடைகளை விதித்த போதும் பல்கலைகழக மாணவர்கள் முதல் சிறி லங்கா சிறையில் வாழும் தமிழ் அரசியல் கைதிகள் வரை மாவீரர்களுக்கு தமது மரியாதையை செய்தனர்.

இந்த நேரத்தில் அனுராதாபுர சிறையில் இருந்த 65 தமிழ் அரசியல் கைதிகளை 32 சிறை காவலர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கியதாக நாம் இலங்கையர் என்ற அமைப்பின் பிரதிநிதி தெரிவித்திருக்கிறார். அத்துடன் சிறையில் அமைக்கப்பட்டு இருந்த இந்து ஆலயம் ஒன்றும் தகர்க்கப்பட்டதாக தாயகத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே நேரத்தில் சென்ற 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பேசிய போது 'போரில் இறந்தவர்களை நினைத்து அவர்களுக்கு பூவைத்து வணங்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமையே எமது நாட்டில் காணப்படுகிறது என்று தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் சிறி லங்கா அரசு இறந்தவர்களுக்கு மதிப்பளிக்காமல் துயிலும் இல்லங்கள், தமிழ் மக்களின் அடையாளங்கள் அழிக்கப்படுவதாக கூறியிருந்தார். இவரின் பேச்சு சிறி லங்கா அரசை தோலுரித்து காட்டுவது போல் இருந்தது.

இந்த உலகத்திடம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று காட்டி சகல உதவிகளையும் பெற்று தமிழர்களை அழித்த சிங்கள அரசு இன்று, சர்வதேச நாடுகளிடையே தமிழ் மக்களின் போரரட்டத்தின் விடயத்தில் பல மாற்றங்களை உருவாக்கி இருக்கும் நிலையில் சிறி லங்கா அரசு பல வழிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறையை தொடர்து கொண்டு இருக்கிறது.

இந்த நேரத்தில் தான் தமிழர்கள் நாம் அனைவரும் ஓர் அணியில் நின்று தமிழீழ மக்களின் பலத்தை சிறி லங்கா அரசுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்து காட்டவேண்டிய போது; இந்த மாவீரர் வணக்க நிகழ்வை வைத்து புலம் பெயர் மக்களை பிரிக்கும் செயலில் சிறி லங்கா அரசு பல வழிகளில் பிரான்சு, பிரிந்தானிய, ஜெர்மனி போன்ற நாடுகளில் சில மக்கள் தொடர்பு சாதனங்கள், மற்றும் சில தமிழ் செயல்பட்டாலர்களை கொண்டு எடுத்த முயற்சியை உலக நாடெங்கும் தமிழ் மக்களால் முறியடிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தமிழீழத்தில் வாழும் மக்களை பாதுகாக்கும் உரிமை எமது கையிலேயே உள்ளது. நாம் ஒன்று சேர்ந்து கொடுக்கும் குரல், புலம் பெயர் அரசுகளிடம் ஒரு மாற்றத்தையும், அரசியல் கொள்கை வகுப்பாளர்களின் சிந்தனையில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமும் ; சிறி லங்கா அரசு எமது மக்களுக்கு எதிராக தாயகத்தில் நடைமுறைமடுத்தும் அடுக்கு முறையை தடுப்பது மட்டுமல்ல, அங்கே சிறி லங்கா அரசு தமிழ் மண்ணில் நடாத்தும் இனச்சுத்திகரிப்பின் வேகத்தை மட்டு படுத்த முடியும்.

அதே நேரத்தில் தமிழ் மக்கள்கால் தெரிவு செய்யப்பட சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறிதரன் போல் தாயகத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான சகல நடவேடிகைகளையும் வன்மையாக கண்டிக்க வேண்டும். சர்வதேச மயப்படுத்தப்பட்ட எமது போராட்டத்தில் சரியான நியாயம் கிடைக்க தாயகத்தில் உங்கள் குரலும் முக்கியம் என்பதை தமிழீழ நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரிந்த கொள்ளவேண்டும்.

இந்த நேரத்தில் மாவீரர் தினத்தன்று அனுராதபுர சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான சிங்கள சிறைச்சாலை அதிகாரிகளின் காட்டுமிராண்டி தனத்தை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், பிரான்சு வாழ் தமிழ் மக்களையும், உலகத்தின் சகல பகுதியில் வாழும் மக்களை இந்த வன்முறையும், சிறி லங்கா அரசு தொடர்ந்து நடாத்தும் இனச்சுத்திகரிப்பை நிறுத்த வேண்டும் என்ற வகையில் கடிதங்களை நீங்கள் வாழும் நாடுகளில் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், வெளிவிவகார அமைச்சு மற்று அரச அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கும் படி கேட்டு கொள்கிறோம்.

நாம் தொடர்ந்து காட்டும் அமைதி சிறி லங்காவை தனது சிங்கள மயப்படுத்தும் அரசியலை மிக வேகப்படுத்தும்.

இந்த மாவீரர்கள் மேல் நாம் செய்த சத்தியத்தை மக்கள் சக்தியாக செயல்படுத்தி அவர்கள் கனவுகளை நனவாக்கி தமிழீழத்தில் நாம் எல்லோரும் சாதிப்போம் என்று செயல்படுவோம்.

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'
: தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.

0 Responses to சிறையில் தமிழ் கைதிகள் மீது சிங்கள காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டிக்கிறது பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com