நவம்பர் மாதம் 27 ஆம் திகதி கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
தாயக விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிரை கொடையாக்கிய வீர மறவர்களை மதிப்பளித்து பூசிக்கும் வண்ணம் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு,
கார்ல்றன் பல்கலைக்கழக விரிவுரையரங்கத்தில் இடம்பெற்றது. கனடிய தேசிய கொடி, தமிழீழ தேசிய கொடி ஏற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. சரியாக மாலை 6:05 மணிக்கு, காணொளி மூலமாக நினைவொலி எழுப்பப்பட்டு, அகவணக்கம் மற்றும் ஈகை சுடர் ஏற்றல் இடம்பெற்றன. பின்னர் வண்ண மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட மாவீரர் நினைவுக்கல்லறைக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து சிறார்களின் எழுச்சி நடனங்கள், மாவீரகளின் வீரத்தினையும் தியாகத்தினையும் நினைவு கூறும் பாடல்கள் மற்றும் கவிதைகள் இடம்பெற்றன. மாணவர்களின் கைவண்ணத்தில் மாவீரர் துயிலும் இல்ல மாதிரி ஒன்று மிகவும் அழகாக உருவாக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக வைக்கபட்டிருந்தது. இறுதியில் உறுதிமொழி எடுக்கப்பட்டு கனடிய மற்றும் தமிழீழ தேசிய கோடி இறக்கப்பட்டன.
பின்னர் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் நிகழ்வுகள் முற்றுப்பெற்றன.









0 Responses to கனடா ஒட்டவாவில் இடம்பெற்ற தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள் 2011 (படங்கள் இணைப்பு)