Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராகுல்காந்தி கேட்டுக்கொண்டால் தீவிர அரசியலில் குதிப்பேன் என ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இப்போதைக்கு அமேதி மற்றும் ரே பரேலியில் தேர்தல் பிரசாரம் செய்யவிருக்கிறேன். தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. ராகுல் காந்தி விரும்பினால் எதையும் செய்வேன் என்றார்.

முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் கட்சியின் மத்தியில் பேசிய பிரியங்கா, உங்களது உட் கட்சிப் பூசலையெல்லாம் குழி தோண்டி புதைத்துவிட்டு காங்கிரசின் வெற்றிக்காக தீவிரமாக செயல்பட வேண்டும். கோஷ்டிப் பூசலை கட்சி சகித்துக் கொள்ளாது. கோஷ்டிகளாக செயல்படுவோரை கண்டறிய கிராம அளவில் ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவறு செய்வோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சட்டசபைத் தேர்தலை ஒட்டி பல்வேறு மாநிலங்களில் சோனியா குடும்பத்தினர் பிரசாரம் செய்து வருகின்றனர். சோனியா உத்தரகண்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரியங்காவும், ராகுலும் உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ராகுல்காந்தி சம்மதித்தால் அரசியலில் இறங்குவேன்: பிரியங்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com