இலங்கையில் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா நாளை கிளிநொச்சிக்கு பயணம் செய்யவுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள கிருஸ்ணா, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி உபகரணங்களை கையளிக்கவுள்ளவுள்ளார்.
இவர் பொன்னகர் கிராமத்தில் ஜந்து இலட்சத்து ஜம்பது ஆயிரம் ரூபாவிற்கு கட்டப்பட்டதாக சொல்லப்படுகின்ற 18 வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கவுள்ளார்.
இதனையொட்டி அப்பகுதியில் உள்ள சிவபாத கலையகம் பாடசாலையில் நடைபெறவுள்ள நிகழ்வில் இரண்டு கட்டிடங்கள் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இக்கட்டிடங்களில் பிரதான கட்டிடம் ஏற்கனவே 2004ம் ஆண்டில் பாஜ் எனப்படுகின்ற ஜப்பானிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் கட்டப்பட்டு இக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
அதுபோல மற்றொரு கட்டிடம் பாடசாலையை அரசாங்கம் 1991 பொறுப்பேற்றபோது கட்டப்பட்டது.
யுத்தத்திற்கு பின்னர் பிரதான கட்டிடம் மிகச்சிறிய சேதத்தோடும் வகுப்பறைக் கற்றலை மேற்கொள்ளக்கூடிய நிலையில் இருந்தது. மற்றைய கட்டிடம் கூரைவேலை சீர் செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. இப்பொழுது இவற்றை சிறிய திருத்தஞ்செய்து வர்ணம் தடவிவிட்டு இந்திய அரசு புனரமைத்துள்ளதாக விளம்பரப்படுத்தப்படுகிறது.
புதிய பாடசாலைக் கட்டடங்களை கட்டித்தர வேண்டிய இந்நிய அரசு வெறும் பழைய கட்டிடங்களுக்கு வர்ணம் பூசி திறந்து வைப்பது கவலை தருவதாகும்.
ஏற்கனவே கிளிநொச்சியில் பல பழைய கட்டிடங்களுக்கு வர்ணம் பூசி அரசு தரப்பு அரசியல்வாதிகள் திறந்து வைத்து நடத்தும் நாடகத்தில் இந்திய வெளியுறவுச் செயலாளர் பங்கேற்பதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



0 Responses to பழைய கட்டிடத்தை திறந்து கிருஸ்ணாவை ஏமாற்றும் இலங்கை அரசு!