விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத முகவரும் தற்போது அரசின் காவலில் இருப்பதாகச் சொல்லப்படும் கே.பி என்கிற குமரன் பத்மநாதன் நேற்று முந்தினம் யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழாவை கொண்டாடினாராம். பருத்தித்துறை, இன்பருட்டியில் உள்ள நேர்டோ அமைப்பின் அலுவலகத்தில் இது நடைபெற்றுள்ளது. யாருமே இல்லாத இடத்தில் தானே பொங்கி அதனை தானே உண்டு மகிழ்ந்துள்ளார் கே.பி. அது சரி நாலுபேருக்கு நல்லது செய்தால் தானே கூட்டம் வரும்!
பிற்பகல் ஒரு மணியளவில் மீனவர்களுக்கு படகு வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார் இவர் அங்கு 25 மீனவர்களுக்குப் படகுகளை வழங்கியுள்ளார். படகுகள் மீனவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டதாக கூறப்பட்டதாம். ஆனால் விசாரித்ததில் இந்தப் படகுகளைப் பெற்ற்றவர்கள் பிடிக்கப்படும் மீன்களை நேர்டோ அமைப்புக்குத்தானாம் விற்கவேண்டும் அத்துடன் படகுகளுக்கான பணத்தினையும் கழித்துக்கொண்டுதானாம் மீனுக்குரிய மீதிப்பணம் வழங்குவோம் எனக் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் படகுகள் வன்னியில் இறுதிச் சண்டக்காலத்தில் முல்லைத்தீவுப்பகுதியில் இறந்துபோன அல்லது வெளியேற்றப்பட்டு மீனவர்களுடையது என்றும் சொல்லப்படுகிறது.
அதிர்வு



0 Responses to யாரும் இல்லாத இடத்தில் யாருக்காகப் பொங்கினார் இவர்?